வடக்கு முஸ்லிம்கள் தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளனர் -றிஷாட் பதியுதீன்

Read Time:1 Minute, 45 Second

வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதனை அடைந்து கொள்வதற்கான ஆக்கபூர்வமான பணிகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார் புத்தளம் புளிச்சாக்குளம் ஹிஜ்ரத்புரம் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கிராமத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2004ம் ஆண்டு வன்னி மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு இருந்த ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போது இரண்டாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதியின் மீதும் எம்மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கையால் அதனை அடைய முடிந்தது தேர்தல் காலங்களில் பிரிந்து நின்றவர்கள் அதனை விடுத்து தற்போது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளுக்காக ஒன்றுபட வேண்டும் எமக்குள் பிரச்சனைகளும் பிளவுகளும் தேவையில்லை நாம் ஒன்றுபட்டு எமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றுபடுவோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் குறைவடைந்துள்ளது
Next post எதிர்வரும் காலங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -கல்வியமைச்சர் தெரிவிப்பு