சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருத்தல் மற்றும் அவசரகாலசட்டத்தை மேலும் நீடித்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

Read Time:2 Minute, 0 Second

இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது ஆனாலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்த விடயம் ஆனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடுவதென ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது மனித உரிமைகள் தொழில் உரிமைகள், ஊடகச்சுதந்திரம் ஆகியவற்றை பொறுத்தமட்டில் இலங்கை ஒழுங்கா நடந்துக்கொள்ளுமானால் அதன் பின்னர் ஒன்றியம் அதன் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யக்கூடும் அதன் மூலம் இலங்கை அந்த சலுகையை மீண்டும் பெறலாம் என்றும்  அவர் தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப்போன்று இலங்கை தொடர்பாக எதிர்மறையான போக்கினை கடைபிடிப்பதாக கூறப்படுவது குறித்த செவேஜ்ஜிடம் கேட்டபோது அது ஒரு வியாபார ரீதியான உறவுமுறையாகும் பொதுஅபிப்பிராயம் குறித்து தம்மால் கருத்து தெரிவிக்கமுடியாது என்று அவர் பதிலளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?
Next post யாழ் பொதுசன நூலக சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கைச் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்குமாறு மாநகர முதல்வர் நிர்ப்பந்தம்