பொய் செய்திகள் ஊடாக குளிர்காய முனையும் தமிழ்வின் போன்ற விசம இணையத்தளங்கள்.. திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இணையத்தளமொன்றில் வந்த செய்திக்கு புளொட் மறுப்பு!
கடந்த 20ம் திகதி வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம்இ நகைகளை கொள்ளையிட்டபோது கொள்ளையர்களின் கத்திக்குத்தில் 09வயது சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்டதுடன் சிறுமியின் தாயாரும், சகோதரனும் காயமடைந்ததும் தெரிந்ததே. இது தொடர்பாக தாஸ் என்பவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, இணையதளமொன்றில் மேற்படி நபர்கள் புளொட் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளமையானது புளொட் அமைப்பின் மீதான வழமையான தமது காழ்ப்புணர்வை காட்டும் உள்நோக்கங் கொண்ட உத்தி என்றே எமது அமைப்பு கருதுகின்றது. எனவே இது தொடர்பான உண்மைநிலையை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எமக்குள்ளதாக கருதுகின்றோம்.
மேற்குறித்த நபரான தாஸ் என்பவர் 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகளால் சுடப்பட்டு உயிர் தப்பி வந்து தனக்கு பாதுகாப்பு தருமாறு எம்மிடம் கேட்டு கோயில்குளம் பிரதேசத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவ்வேளையில் அங்கு ஒருசில சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற புகார்களையடுத்து நாம் அவரை 2008ம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளியேற்றியிருந்தோம். பின்னர் மேற்படி தாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கைவிட்டு விலகிச் சென்று வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக அவரது மனைவி மூலம் அறிந்தோம்.
இந்நிலையில் அவர் வேறுசில கிராமங்களில் தன்னைப் புளொட் உறுப்பினர் என அறிமுகப்படுத்தி வருவதை கேள்வியுற்ற நாம்இ இது தொடர்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். அத்துடன் இவர் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்தும்இ தனது மனைவியுடன் தகராறு செய்து வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையிட்டதுடன்; மனைவியையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றது தொடர்பாகவும் மனைவிய+டாக ஏற்கனவே வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்திருந்தோம்.
இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, கிரி மற்றும் குரு என்பவர்கள் எமது அமைப்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அதேநேரம், வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்ற மேற்படி கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து இவர்களைக் கைதுசெய்து பொலீசாரிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட உடனடி கடும்பிரயத்தனம் திருநாவற்குளம் மக்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.
இணையத்தளங்களின் இவ்வாறான திட்டமிட்ட புனைவுகள் எமது கழகத்தை மல்லினப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கிறோம். எனினும் இவ்வாறான அவதூறு பிரச்சாரங்கள் எமது செயற்பாடுகளை எவ்விதத்திலும் பாதிக்காதென்பதையும் உண்மை நிலைமைகளை இங்குள்ள மக்கள் அறிவர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். -ஊடகப்பிரிவு -புளொட்
Average Rating