எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்-நித்யானந்தா

Read Time:5 Minute, 27 Second

நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த மாட்டோம், நித்யானந்தாவிடம் மட்டுமே விசாரணை நடத்துவோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தாவிடம் விசாரணை நடத்துவார்களா?. இதற்காக நித்யானந்தா சாமியார் சென்னைக்கு அழைத்து வரப்படுவாரா?
பதில்: விசாரணைக்காக நித்யானந்தா சாமியாரை சென்னைக்கு அழைத்து வர மாட்டோம். அதே நேரத்தில் மோசடி புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீசார் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் பெங்களூர் சென்று நித்யானந்தாவை விசாரிப்பார்கள். நித்யானந்தா கர்நாடக போலீஸ் காவலில் இருக்கும்போதே இந்த விசாரணை நடைபெறும். எனவே விரைவில் தனிப்படை போலீசார் பெங்களூரு பயணமாவார்கள்.

நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணையில்லை…

கேள்வி: நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவை விசாரிப்பீர்களா?

பதில்: நடிகை ரஞ்சிதாவிடம் நாங்கள் விசாரணை எதுவும் நடத்த மாட்டோம். பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தலாம். நித்யானந்தா சாமியார் மீது நாங்கள் போடப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்கிற்கும், நடிகை ரஞ்சிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கேள்வி: ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் இணைந்து இருக்கும் ஆபாச வீடியோ படங்கள் அடிப்படையில்தானே நித்யானந்தா சாமியார்மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்படியிருக்கும்போது நடிகை ரஞ்சிதாவிற்கு தொடர்பு இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?

பதில்: ரஞ்சிதா, நித்யானந்தா சம்பந்தபட்ட வீடியோ காட்சிகள் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் நித்யானந்தா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். அதனடிப்படையில் தான் நித்யானந்தா சாமியார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரஞ்சிசாவுடனான வீடியோ காட்சி அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போடப்படவில்லை. பல பெண்களை பலாத்காரப்படுத்தினார் என்ற புகார் அடிப்படையில் தான் கற்பழிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

ஆனால், பெங்களூர் போலீசார் ரஞ்சிதாவை விசாரிக்க முடிவு செய்து அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை தனிப்படை அமைப்பு:

இந் நிலையில் நித்தியானந்தாவிடம் விசாரிக்க சென்னை போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. இந்தப் படை விரைவில் பெங்களூர் செல்லும்.

ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்-நித்யானந்தா:

இந் நிலையில் போலீஸ் விசாரணைக்கு இடையே நிருபர்களிடம் பேசிய நித்யானந்தா,

நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன்.

நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக்கு எதிராக பேசுவார்.

என்னைப்பற்றிய எல்லா விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு தெரியும். நான் நல்லவன் என்பதற்கு அவர் சாட்சியாக இருக்கிறார். பிறர் வற்புறுத்தலுக்காக எனக்கு எதிராக திரும்ப மாட்டார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் -நிமல் சிறிபாலடி சில்வா
Next post துபாய் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்