உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் -எதிர்கட்சி தலைவர்

Read Time:2 Minute, 54 Second

அரசாங்கம் எதிர்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒவ்வொரு  உறுப்பினரினதும் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் இல்லையேல் உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 7வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது. சபாநாயகர் தெரிவுக்கு பின் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்தமுறை சபாநாயகரை இரவு சாப்பாட்டிற்கு பின்னரே தெரிவு செய்தோம்  எனக்கும் புதிய சபாநாயகருக்கம் தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் இந்த இடத்தில் ஒரு கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை முழு பாராளுமன்றத்தின் பிரதிநிதியாகவே இருக்கிறார் சபாநாயகரின் பொறுப்பு என்ன என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் பாராளுமன்றத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு  நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்தின் மூலமாக கட்டுப்படுத்த வேண்டும் இவற்றை பாதுகாக்கவில்லையாயின் நாடு உங்களை பாதுகாக்காது. அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒவ்வொரு அரசாங்க உறுப்பினரும் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் 1835ம் ஆண்டிற்கு பின்னர் ஆசியாவிலேயே பழைய பாராளுமன்றம் என்ற வரலாற்று பெருமையை எமது பாராளுமன்றம் கொண்டிருக்கிறது உரிமைகளை பாதுகாக்கவேண்டும் இல்லையேல் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர். மலையகத்திலிருந்து தெரிவான பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு பொறிமுறைகள் இருக்க வேண்டும் அதனை வசனத்தி;ல் மட்டுப்படுத்தக் கூடாது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப்புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் கைது
Next post விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் -அமெரிக்கா வலியுறுத்து