ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகத் தீர்மானம்

Read Time:1 Minute, 42 Second

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்;. ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலுக்கு முன்பு வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப்பட்டியல் ஆசனமொன்றை கட்சிக்கு வழங்காமையே இதற்கான காரணமென்று அவர் கூறியுள்ளார். தேசியப் பட்டியல் ஆசனமொன்றை வழங்குவதாக ஐ.தே.முன்னணி உறுதியளித்ததன் காரணமாகவே எமது தலைவர் மனோகணேசன் கண்டி மாவட்டத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டார். எங்களது மூன்றாவது விருப்புவாக்கினை கொழும்பு மாவட்டத்தில் நாங்கள் முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கக் கோரியிருந்தோம். ஐ.தே.கட்சிக்குள் இருக்கும் சில இனவாதிகள் காரணமாக எமது கட்சிக்கு தேசியப்பட்டில் பதவி தர மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று எமது கட்சி கூடி ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி நின்று தனித்துவமாக ஜனநாயக மக்கள் முன்னணியாக பாராளுமன்றில் செயற்படுவதென்ற தீர்மானத்தை எடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிஎம்விபியின் மட்டு உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாக மோசடிகள்..
Next post இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு