வன்னிக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் கைது..

Read Time:1 Minute, 13 Second

போலியான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வன்னிக்கு நுழையமுற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்றுமாலை வவுனியா- தாண்டிக்குளம் சோதனை சாவடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து ஆட்டோவில் பயணித்த இவர் விசாரணையின் பொருட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரகசிய பொலிசார் இவர்மீதான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தாய்வானில் ஊடகவியலாளராக கடமையாற்றுபவர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பமைச்சின் அனுமதியின்றி ஊடகவியலாளர்கள் எவரும் மக்கள் மீள்குடியேறியுள்ள வன்னிப் பிரதேசத்திற்கு நுழைய முடியாது அதனையும் மீறி போலியான அனுமதியுடன் இவர் வன்னிக்கு நுழைய முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வதி அம்மையாரை வைத்து ஈழ ஆதரவு பிரசாரம் செய்ய திட்டமிட்டோமா? -வைகோ மறுப்பு
Next post இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்