இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்..

Read Time:2 Minute, 22 Second

முதன் முறையாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தியாவில் 15லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சேவாலங்கா நிறுவனத்துடன் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து இப்பிரதிநிதிகளுடனான விஜயத்திற்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். மாவட்டத்திற்கு விஜயம்செய்த இக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பு இந்திய சுய தொழில் பெண்கள் சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உமா தேவி சுவாமிநாதன் தலைமையில் இடம்பெற்றது. முதலமைச்சரின் மீள்குடியேற்ற பணிப்பாளர் அ.செல்வேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், ஊடக செயலாளர் ஏ.தேவராஜன் உட்பட கிழக்கு மாகாண சபை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்திய பெண்கள் பிரதிநிதிகள் தரப்பில் மேற்படி அமைப்பு இணைப்பாளர்களான மேகாதேவி, வீணா சர்மா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தவர்களின் பிரச்சினை, பெண்களின் சுயதொழில் வாய்ப்பு, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பநிலவரம் என்பன குறித்தும் முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்திய பிரதிநிதிகள் குழுவினரிடம் எடுத்துவிளக்கினர். மேலும் பல பகுதிகளுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். இளவாலைச் சிறுவன் கதிர்காமம் மாணிக்க கங்கையில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு
Next post புதிய பலாலி கட்டளைத் தளபதி நியமனம்..