இமாச்சலப் பிரதேசத்தில் 2 சீடர்களுடன் நித்யானந்தா கைது!

Read Time:5 Minute, 28 Second

இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சீடர்களான நித்ய பக்தானந்தா மற்றும் கோபால் சீலம் ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர்.

நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார்.

தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார்.

அவர் மீது மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

சமீபத்தில் தனது ஆசிரம தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.

மீண்டும் ரெய்ட்:

இந் நிலையில் நித்யானந்தாவின் ஆஸிரமத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் நேற்று மீண்டும் திடீர் சோதனை நடத்தினர்.

ஆஸிரம ஆவணங்களை பார்வையிட்ட அவர்கள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பல மணி நேரம் சோதனையும் நடத்தினர்.

இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.

இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்தபோது நித்யானந்தாவிடம் ரூ. 3 லட்சம் இந்தியப் பணமும், 2,000 டாலர்கள் மதிப்புள்ள டிராவலர்ஸ் செக்கும் இருந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றினர்.

அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்?:

இதற்கிடையே நித்யானந்தா மீது ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கலாகியுள்ளது. அதில், அவரைக் கைது செய்து, வரும் மே மாதம் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நித்யானந்தா ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

டைவர்ஸ் பெண்களைத் தேர்வு செய்த நித்தியானந்தா:

இதற்கிடையே, நித்தியானந்தா மீது அமெரிக்காவிலும் செக்ஸ் மோசடிப் புகார் [^] எழுந்துள்ளது.

அமெரிக்காவில் கென்கேரி என்ற இடத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. அங்கு வரும் பெண்களில் விவாகரத்தானவர்களை மட்டும் இவர் தேர்வு செய்வாராம்.

அவர்களில் சிவரை சர்வ சக்தி படைத்த என்னுடன் செக்ஸ் உறவு கொண்டால் உங்களுக்குரிய உரிமைகளை பெறலாம் என்று கூறி ஏமாற்றியுள்ளார். வசிய வார்த்தைகள் மற்றும் அவரது வெளி வேஷத்தை பார்த்து மயங்கி பல பெண்கள் இவரது வலையில் விழுந்து இருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய பலாலி கட்டளைத் தளபதி நியமனம்..
Next post இலங்கையின் பிரதமராக ஜெயரத்னே பதவியேற்றார்