ஜனாதிபதி 2வது பதவிப் பிரமாணம்வரை 38பேருடன் தற்காலிக அமைச்சரவை

Read Time:1 Minute, 17 Second

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாணம்வரை 38 உறுப்பினர்களுடன் தற்காலிக அமைச்சரவையே நாளை பதவியேற்கும் என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன அதன்படி எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது பதிவிக் காலத்துக்கென சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நிரந்தரமான அமைச்சரவை பதவியேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது 38 அமைச்சர்கள் மட்டும் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படுவதால் பதவியிழக்கும் ஏனைய அமைச்சர்கள் அவர்கள் ஏற்கனவே பொறுப்பில் இருந்த அமைச்சுக்களை மேற்பார்வை செய்யும் பணிகளை முன்னெடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. தனக்கு நம்பிக்கையான தனது பணிகளுக்கு உறுதுணையாக நிற்பவர்களே இந்த தற்காலிக அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்சேகாவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற ஜேவிபியின் கருத்து நகைப்புக்குரியது -ஐ.தே.கட்சி தெரிவிப்பு!
Next post போலியான பொலிஸ் வாகனம் களுத்துறையில் பிடிபட்டது