ஜனாதிபதியுடன் எதிர்கட்சித் தலைவர் இன்று சந்திப்பு

Read Time:1 Minute, 40 Second

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவிற்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே சந்திப்பொன்று இன்று முற்பகல் 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கிறது அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரின் இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன 2010ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெற்ற பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும் இருதலைவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பு சுமார் 45நிமிடங்கள் நீடித்ததாகவும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன சந்திப்பின் போது புதிய நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள சபாநாயகர் தொடர்பாகவே இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐ.தே.கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தேசிய அரசியல் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் ஒருவர் வெட்டிக் கொலை
Next post அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தை செய்ய மாட்டேன் -ரவூப் ஹக்கீம்