கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

Read Time:1 Minute, 27 Second

LandMine.2.jpgமட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர்.

இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப்புறங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து துரத்தும் நோக்கம் இருப்பதாக புலிகளால் குற்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி கண்ணிவெடி புலிகளே தமது பாதுகாப்பை முன்னிட்டு புதைத்து வைத்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்
Next post திண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி