வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஈரான் விருப்பம்

Read Time:1 Minute, 30 Second

Iran-Eu.jpgஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ரஷியா ஆகிய 5 நாடுகளோடும் மற்றும் ஜெர்மனியோடும் அணு சக்தி பிரச்சினை குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஈரான் கூறி உள்ளது.

அணு ஆராய்ச்சியை ஈரான் கைவிட்டால் அதற்குப் பல்வேறு உதவிகளைச் செய்ய அமெரிக்கா முன் வந்து உள்ளது. ஈரானின் போக்குவரத்துக்கு தேவையான விமானங்களை வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது. இந்த உதவிகள் பற்றி பரிசீலிக்க கால அவகாசம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.

இதைத் தொடர்ந்து தான், ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு கொள்கை வகுக்கும் தலைவர் ஜாவியர் கொலானா ஈரான் அணு சக்தி விவகாரப் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் அலி லாரி ஜானியைச் சந்தித்துப் பேசினார்.

அதன் பிறகே 6 நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஈரான் அறிவித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்!
Next post மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்