புவனேஸ்வரி கையெழுத்து போட்டாக வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு

Read Time:3 Minute, 38 Second

bhuvaneswari081விபச்சார வழக்கில் கைதாகி, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட சினிமா நடிகை புவனேஸ்வரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்து பிடிபட்டார் புவனேஸ்வரி. அவர் உள்பட 3 பேரை கையும் களவுமாக பிடித்த போலீஸார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி புவனேஸ்வரியை புழல் சிறையிலும், மற்ற இரு பெண்களை காப்பகத்திலும் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன கோரி மனுத் தாக்கல் செய்தார் புவனேஸ்வரி. ஆனால் போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்ததால் மனு தள்ளுபடியானது. இதையடுத்து மறுபடியும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த முறை அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த 14ம் தேதி விடுவிக்கப்பட்டார் புவனேஸ்வரி. ஆனால் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரி கையெழுத்துப் போடவில்லை. இந்த நிலையில், நேற்று புவேனஸ்வரி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு பூபாலன் முன்பு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயரத்னாகுமார், நடிகை புவனேஸ்வரி ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில், புவனேஸ்வரிக்கு கோர்ட் வழங்கிய நிபந்தனை ஜாமீன் படி, மறு உத்தரவு வரும் வரை அவர் தினமும் காலையில் வீட்டின் அருகே உள்ள சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். ஆனால் கடந்த 3 தினங்களாக அவர் கையெழுத்து போடவில்லை. கோர்ட் உத்தரவை புவனேஸ்வரி மீறி உள்ளார். எனவே, அவரது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் புவேனஸ்வரிக்கு வழங்கிய ஜாமீனையும் ரத்து செய்யவேண்டும் என கூறியிருந்தார். 2 தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் பூபாலன், நடிகை புவனேஸ்வரி ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மறு உத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 78பேரை அழைத்துச் செல்வதற்கு ஆஸிக்கு கால அவகாசம் வழங்கிய இந்தோனேசியா
Next post அன்று பிரபாகரன் புகழ்பாடிய “கருணா” இன்று மஹிந்த புகழ் பாடுகின்றார் (Part-5)