78பேரை அழைத்துச் செல்வதற்கு ஆஸிக்கு கால அவகாசம் வழங்கிய இந்தோனேசியா

Read Time:2 Minute, 43 Second

இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச்செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக்கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட மேற்படி அகதிகளின் விவகாரத்தினால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தியடைந்த அவுஸ்திரேலிய பிரதமர் கெவின்மீது அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாதென அவுஸ்திரேலியா கடந்த புதன்கிழமை வலியுறுத்திக் கூறியது. விசாரணைக்காக அகதிகள் இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அது தொடர்பில் இந்தோனேசியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க, இந்தோனேசியாவின் றியாவ் தீவிற்கு அருகில் அகதிகளுடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய ஓசானிக் வைக்கிங் கப்பல் நவம்பர் மாதம் 6ம் திகதி மட்டுமே அங்கு தரித்து நிற்க அனுமதிக்கப்படும் என்று இந்தோனேசிய வெளிநாட்டமைச்சு பேச்சாளர் ரேகு பெஸாஸயா நேற்று தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் அல்லது இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் மார்டி நதலேகாவா வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இலங்கைத் தமிழ் அகதிகளை என்ன செய்வது என்பதை தீர்மானிப்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவிடயம் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “78பேரை அழைத்துச் செல்வதற்கு ஆஸிக்கு கால அவகாசம் வழங்கிய இந்தோனேசியா

  1. இவர்கலேலாம் ஐந்து வருடத்துக்கு முன்பே இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் என்று ஒரு செய்தி கசிய ஆரம்பித்துள்ளது.
    எது உண்மையோ…

    கொழும்பு செல்வந்தர் பகுதியான கறுவாதோட்டத்தில் இருந்து சுனாமியால் பாதிக்கப் பட்டதாக கூறி விசா பெற்ற சிலரின் ஞாபகம் தான் வருகிறது…..

    பலருக்கு இலங்கையில் யுத்தம் தேவை படுகிறது.. காரணம் என்ன வென்று நான் சொல்ல தேவை இல்லை…

    ஆனால் உண்மையாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு உதவ கை கோர்ப்போம்….

  2. It is same that few Clowns are putting down their own blood. It doesn’t matter if you leave the country 5 or 10 yrs ago but these people left the country for political reasons and the Refugee camps in Indonesia is worse than the prison. It was telecasted in Australian media. Next time please do not write your comments after drinking few Beers or for gossiping.

    உதவி செய்யாட்டியும் பரவாஇல்லை உபத்திரவம் குடுக்க வேண்டாம்

    http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1257068433&archive=&start_from=&ucat=1&

  3. பீர் அடிச்சிட்டு கருது எழுத உங்களை போல சிறு புத்தி இல்லை எங்களுக்கு,

    நீங்களே அங்கள் உறவுக்கு எமனாக இருந்தீர்கள்.. இப்போது அழிந்த பின்னும் புலம் பெயர் நாட்டில் உள்ள சிறு புல்லுருவுகள் மீண்டும் எமனாக வருகிறார்கள்.

    நாங்களே எமக்கு எதிரி ஆகி விட்டோம்… அகதி எண்டு புலம் பெயர் நாட்டுக்கு வந்து என்ன செய்தீர்கள்? ஒரு கொஞ்ச காலம் பினோக்கி பாருங்கள்…

    ஒரு நாடும் இப்போது இரக்கப்படுவதாய் இல்லை… ஏன்?
    உதவி செய்யாட்டியும் பரவாஇல்லை உபத்திரவம் குடுக்க வேண்டாம் . அது உங்களுக்கே பொருந்தும்…..

    போராட்டம் என்று நீங்கள் கூறிக்கொண்டு செய்யும் கூத்துகள் எல்லாம், எமது உறவுகளுக்கு எதிராகவே அமைந்துள்ளன.. வரலாறு அதை தான் கூறுகிறது….

    தயவு செய்து, இனியும் உபத்திரவம் குடுக்க வேண்டாம், அடிச்ச பணத்தோடு சந்தோசமாக இருங்கள்.. ஒருவரும் கணக்கு கேக்க மாட்டம்..மிஞ்சிய தமிழராவது சந்தோசமாக இருக்கட்டும்.

  4. பீர் அடிச்சிட்டு கருது எழுத உங்களை போல சிறு புத்தி இல்லை எங்களுக்கு,

    நீங்களே அங்கள் உறவுக்கு எமனாக இருந்தீர்கள்.. இப்போது அழிந்த பின்னும் புலம் பெயர் நாட்டில் உள்ள சிறு புல்லுருவுகள் மீண்டும் எமனாக வருகிறார்கள்.

    நாங்களே எமக்கு எதிரி ஆகி விட்டோம்… அகதி எண்டு புலம் பெயர் நாட்டுக்கு வந்து என்ன செய்தீர்கள்? ஒரு கொஞ்ச காலம் பினோக்கி பாருங்கள்…

    ஒரு நாடும் இப்போது இரக்கப்படுவதாய் இல்லை… ஏன்?
    உதவி செய்யாட்டியும் பரவாஇல்லை உபத்திரவம் குடுக்க வேண்டாம் . அது உங்களுக்கே பொருந்தும்…..

    போராட்டம் என்று நீங்கள் கூறிக்கொண்டு செய்யும் கூத்துகள் எல்லாம், எமது உறவுகளுக்கு எதிராகவே அமைந்துள்ளன.. வரலாறு அதை தான் கூறுகிறது….

    தயவு செய்து, இனியும் உபத்திரவம் குடுக்க வேண்டாம், அடிச்ச பணத்தோடு சந்தோசமாக இருங்கள்.. ஒருவரும் கணக்கு கேக்க மாட்டம்..மிஞ்சிய தமிழராவது சந்தோசமாக இருக்கட்டும்.

Leave a Reply

Previous post 400அடிஉயரத்திலிருந்து விழுந்தநபர் அடுத்த நாள்காலை உயிருடன் கண்டுபிடிப்பு
Next post புவனேஸ்வரி கையெழுத்து போட்டாக வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு