நெற்களஞ்சிய பகுதி விடத்தல்தீவு மக்களை மீள்குடியமர்த்தும் வகையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு ஐந்து இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
மன்னார் நெற்களஞ்சிய பகுதி மற்றும் விடத்தல்தீவு பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு வசதியாக நேற்றையதினம் வழங்கப்பட்ட ஐந்து மிதிவெடியகற்றும் இயந்திரங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். விடத்தல்தீவு பகுதி மற்றும் நெற்கஞ்சிய பகுதியில் சுமார் 89 சதுர கிலோமீற்றர் பகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது. விடத்தல்தீவு பகுதியில் மீன்பிடித்தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் விதத்தில் மக்கள் அங்கு குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 14மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவை மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதி உட்பட ஏனைய பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்றுக்காலை விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன எயார்லைன்ஸ_க்கு சொந்தமான வீ 18-706 ரக சரக்கு விமானத்தில் ஸ்லோவேக்கியாவிலிருந்து தானியக்க மிதிவெடி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Average Rating
One thought on “நெற்களஞ்சிய பகுதி விடத்தல்தீவு மக்களை மீள்குடியமர்த்தும் வகையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு ஐந்து இயந்திரங்கள் அனுப்பி வைப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
இந்த வருடம்(2009) ஜனவரி மாதம் தொடக்கம் புலம்பெயர் தேசங்களில் வரலாற்றில் இல்லாத பெரிய எழுச்சியும் ஒன்றுதிரளலும் ஏற்பட்டது. இந்தகாலப் பகுதியில் புலம்பெயர் தமிழ்மக்களிடம் பெரியஅளவில் நிதித்தரட்டல்கள் பல்வேறு தரப்பினராலும் விடுதலையின் பெயரால் நடாத்தப்பட்டன.ஒவ்வொரு தேவைகளுக்கும் வித்தியாசமான ஆயுதங்களின் தேவைகளுக்காகவும் என்று சொல்லிச் சொல்லி மிகப்பெரிய தொகை நிதி சேகரிக்கப்பட்டது. புலம்பெயர் மக்களும் தங்களுடைய தாயகபோராட்டம் காப்பாற்றப் படவேண்டும் என்பதற்காகவும் போராட்டத்தை காத்துநின்ற மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தங்களால் இயன்றதைவிடவும் பல மடங்கு அதிகமான நிதியை அள்ளி வழங்கினார்கள்.
ஆனால் இந்த நிதியை கையாள்பவர்களுக்கு போராட்டத்தின் முடிவு இரண்டு மாதங்களுக்கு முன்னமே ஓரளவுக்கு தெரிந்திருந்ததால் இவர்கள் தங்கள் கையிலிருந்த நிதியை அனுப்புவதில் தாமதங்களையும் இழுத்தடிப்புகளையும் செய்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் நினைத்ததைப் போலவே அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே முள்ளிவாய்க்காலில் மே மாதம் 19ம் திகதியுடன் மௌனமாகியது. சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு பெரியதொகை பணம் புலம்பெயர் நிதியை கையாள்பவர்களுடையதும் அவர்களின் பினாமிகளின் கைகளிலும் தேங்கியது. மிகவும் கேவலமான முறையிலும் ஈவுஇரக்கம் இல்லாத முறையிலும் இவர்கள் அந்த நிதியை தங்களுடையது ஆக்கிக்கொண்டார்கள். புலம்பெயர் தேசங்களில் பனிக்குள்ளும் மழைக்குள்ளும் இரவுபகலாக தொழிற்சாலைகளிலும் தெருக்களிலும் கடைகளிலும் வேலைசெய்து எமது மக்களால் வழங்கப்பட்ட நிதி மிருகத்தனமாக கொள்ளையிடப்பட்டது.
இவர்களால் திருடப்பட்ட பணம் இப்போது சென்னையிலும் திருச்சியிலும் கொழும்பிலும் வீடுகளாகவும் விடுதிகளாகவும் சில ஈனங்களால் வாங்கப்பட்டு வருகின்றது. சிலர் கொஞ்சம் வித்தியாசமாக மத்தியகிழக்கு நாடுகளில்கூட சொத்துகளை வாங்கிக் குவிக்கும் அற்பத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலம்பெயர் நாடுகளில்கூட கடைகளையும் வீடுகளையும்கூட வாங்கிக் குவிக்கின்றனர். இவர்கள் அனைவரின் பெயர்களும் அவர்கள் வாங்கிக் குவிக்கும் சொத்துக்களின் விபரங்களும் மிகவிபரமாக சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாமன் மச்சான் சகோதரங்களின் பெயர்களில் வாங்கப்படும் சொத்துக்களின் விபரங்கள் தெளிவாக சேகரிக்கப்பட்டு வருகின்றது. எந்தவிதமான காரணங்களும் இவர்களின் இந்த பகல்கொள்ளைக்கும் திருட்டுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர்களின் கைகளில் நிதியாகவும் சொத்துகளாகவும் இப்போது இருப்பது எமது மக்களின் சொத்து. அவர்கள் வியர்வைசிந்தி நொந்து உழைத்தபணம்.
எனவே இவர்கள் உடனடியாக தங்கள் கைகளில் உள்ள மக்கள் சொத்தை முகாம்களில் அல்லலுறும் மக்களுக்கும் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு கைகளில் ஏதுமில்லாமல் அனுப்பப்படும் மக்களுக்கு வீடுகளை வாங்கவும் தொழில் தொடங்கவும் கொடுக்க முன்வரவேண்டும். எமது போராட்டத்தின் கவசமாக நின்ற அந்த வன்னிமக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த நிதி செலவழிக்கப்பட வேண்டும். மேலும், பல புலம்பெயர் தமிழ்மக்கள் வங்கிகளில் பெரும்தொகையை கடனாக பெற்று கொடுத்தார்கள். தங்களுடைய நண்பர்கள் மூலமும் கடன்பெற்றும் தேசியநிதிக்கு கொடுத்தார்கள்.இதனை அவர்கள் கடனாகவே வழங்கினார்கள். அவர்களின் கடன்தொகைக்கு மாதாமாதம் கட்டவேண்டிய தொகையை இப்போது புலம்பெயர் மேய்ப்பர்கள் கட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.அவர்கள் தங்களின் மாதவருமானத்தைவிட அதிகமான தொகையை கடனுக்காக கட்டி அல்லலுறுகிறார்கள்.
மக்களின் நிதியை திருடி வைத்திருப்பவர்கள் இவர்களுக்கும் தாங்கள் வைத்திருக்கும் நிதியை கொடுக்க முன்வரவேண்டும். அதிவிலை கூடிய ஆடம்பர வாகனங்களில் திரியும் இந்த மக்கள்சொத்து திருடர்கள் மக்களுக்கே அனைத்தையும் வழங்க வேண்டும். இவற்றில் கேவலமாக இந்த திருடர்கள் இப்போது தங்களை ஏதாவது ஒரு அணியில் (நாடுகடந்தகுழு, வட்டுக்கோட்டைக்குழு, மக்கள்பேரவைக்குழு, இத்தியாதி… இத்தியாதி) தங்களை மறைத்து நிற்கிறார்கள். இவர்கள் எங்கு நின்றாலும் என்னநிலையில் இருந்தாலும் யாருடைய தயவில் இருந்தாலும் யாரால் அங்கீகாரம் பெற்று இருந்தாலும் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்கள் இவர்களை அடையாளம்காண வேண்டும். அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.