ராஜ் ராஜரட்ணத்தின் பிணைத் தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது

Read Time:1 Minute, 55 Second

பங்கு உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் பிணை 100 மில்லியன் அபராதத்தொகையை 25மில்லியன் டொலர்களாக குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவருக்கு 10வருடத்திற்கும் குறையாத தண்டனையே வழங்கப்படும் என அவருடைய சட்டத்தரணி ஜோன் டௌட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜ்ரட்ணத்தின் பிணைக்காக அசாதாரண நிபந்தனைகள் விதி;க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள மொடப்பிற்கு 150வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன் ராஜ் ராஜரட்னத்துக்கான பயணத்தூரமும் நியுயோர்க் நகருக்குள் 175 கிலோமீற்றர் தூரம் என மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பிறந்த ராஜ் ராஜரட்னம்  உலகிலேயே 549வது கோடீஸ்வரர் ஆவார் அவர் நியுயோர்க் நகரில் 17.5மில்லியன் டொலர்கள் பெறுமதியான மாளிகையில் தமது மனைவியடன் இருபத்தொரு வருடமாக வாழ்ந்து வருகிறார் இதற்கிடையில் ராஜ் ராஜரட்னம் தமது பிழைகளை இதன்பின்னர் திருத்திக் கொள்வார் என சட்டத்தரணி டவுன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கே.பி. சர்வதேசரீதியில் செயற்பட்டுவரும் 57புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் -திவயின தகவல்
Next post கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்ட ஆறுபேர் பிணையில் விடுதலை