கே.பி. சர்வதேசரீதியில் செயற்பட்டுவரும் 57புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் -திவயின தகவல்

Read Time:2 Minute, 3 Second

சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது அவையாவன புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப்பொறுப்பாளர் கதிர்காமதம்பி அரவிகன் மற்றும் அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன் பாலசிங்கம் உலக ஈழஇளைஞர் அமைப்பின் அண்டுவேல்மன் கனடாவைச ;சேர்ந்த உருத்திரகுமார், பிரித்தானியாவைச் சேர்ந்த இளங்கோ, கனடாவைச் சேர்ந்த இளங்கபிள்ளை, அர்ஜூன எதிர்வீரசிங்கம், வினிபரா எனப்படும் ரஞ்சித் பெர்ணான்டோ, சுவீடனைச்சேர்ந்த ஜெகன்மோகன், நோர்வேயைச் சேர்ந்த ஜெயசந்திரன், நெடியவன் மலேசியாவைச் சேர்ந நாகலிங்கம் லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கருணாகரன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலசந்திரன் கனடாவின் டேவிட் பூபாலப்பிள்ளை, அமெரிக்காவைச் சேர்ந்த ராஜ் ராஜரட்ணம் என்பவர்களே அவர் வெளியிட்டுள்ள பெயர்களாவன. கடந்த 25ஆண்டுகளாக விடுதலைப்புலிகளுக்கு நிதிதிரட்டல் புலிகளின் இணையதளங்களை செயற்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குமரன் பத்மநாதன் இந்த அம்பலப்படுத்தலுடன் சில புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக திவயின மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “கே.பி. சர்வதேசரீதியில் செயற்பட்டுவரும் 57புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் -திவயின தகவல்

  1. நம் செயல்களால் நாமே நமது இனத்தை நடுத்தெருவில் விட்டு விட்டோம்….யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளை எல்லா நாடுகளும் சந்தேக கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டன….

    இந்த லட்சணத்தில நாடு கடந்த தமிழ் ஈழம் என்று ஒன்று தொடங்கி.. மிச்சம் மீதி தமிழரையும் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்போறாங்கள்…

Leave a Reply

Previous post சண்டேலீடர் இரு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்
Next post ராஜ் ராஜரட்ணத்தின் பிணைத் தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது