அழகியின் முகத்தை அலங்கோலமாக்கிய ஷில்பாவின் அழகு நிலையம்
டேராடூனைச் சேர்ந்த இளம் நடிகை மற்றும் மாடல் அழகியின் முகத்தை அலங்கோலமாக்கியுள்ளது நடிகை ஷில்பா ஷெட்டியின் அயோசிஸ் அழகு நிலையம். இதையடுத்து ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மாடல் அழகி. பாதிக்கப்பட்ட அந்த அழகியின் பெயர் கெளரி கான். டேராடூனைச் சேர்ந்தவர். இளம் நடிகை மற்றும் மாடல் அழகி. 22 வயதான இவர் தி லிஜென்ட் ஆப் மாயாவதி என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் மும்பையில் உள்ள ஷில்பா ஷெட்டி மற்றும் சந்திரகிரன் கெளர் ஆகியோர் இணைந்து நடத்தும் அயோசிஸ் அழகு நிலையத்திற்குச் சென்று முக அழகை அதிகரிக்கும் பிக்மென்டேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் அழகு கூடுவதற்குப் பதில் முகமே அலங்கோலமாகி விட்டது. தோல் கருத்து, சுருங்கி, கரும்புள்ளிகள் ஏற்பட்டு முகமே கோரமாகி விட்டது. இதனால் அதிர்ச்சியுற்ற கெளரி கானுக்கு மாடல் வாய்ப்புகள் பறிபோயின. சினிமாவிலும் வாய்ப்புகள் வராமல் போய் விட்டது. எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதையடுத்து ஷில்பா ஷெட்டி, அவரது பார்ட்னர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் கெளரி கான். மேலும் ஓஷிவாரா காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். ரூ. 17 லட்சம் இழப்பீடும் கோரியுள்ளார். இந்த சிகிச்சைக்காக ரூ. 38 ஆயிரம் பணத்தை செலவழித்துள்ளாராம் கெளரி கான். இதுகுறித்து அயோசிஸ் நிறுவன வக்கீல்கள் கூறுகையில், சிகிச்சைக்குப் பின்னர் கவனமாக இருக்கவில்லை கெளரி கான். இதனால்தான் அவருக்கு இப்படியாகி விட்டது. எங்கள் மீது தவறில்லை என்கின்றனர். இதுகுறித்து கெளரி கான் கூறுகையில், எனது முக அழகு பறிபோன பின்னர் நான் அந்த ஸ்பாவை அணுகி எனது பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் முடியாது என்று கூறி விட்டனர். இதையடுத்து நான், ஷில்பா ஷெட்டி இந்த ஸ்பாவை பிரபலப்படுத்தி பேசி வருகிறாரே என்று கேட்டதற்கு எல்லோரும் ஷில்பா ஷெட்டி ஆகி விட முடியாது என்றார். நான் ஒரு மாடல். எனது எதிர்காலமே எனது அழகில்தான் உள்ளது. ஆனால் இப்பபடி பண்ணி விட்டார்கள். நான் ஷில்பா ஷெட்டி ஆக விரும்பவில்லை. ஆனால் எனது முகத்தை அப்படியே திரும்பித் தாருங்கள். எல்லாவற்றையும் நான் இழந்து விட்டேன் என்றார் கெளரி கான்.
Average Rating
One thought on “அழகியின் முகத்தை அலங்கோலமாக்கிய ஷில்பாவின் அழகு நிலையம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
அழகு இயற்கையில் இருக்க வேண்டும்..
அழகு நிலையங்களில் போய் தம்மை அழகு செய்பவர்களுக்கு இந்த செய்தி ஒரு பாடமாக அமையட்டும்….