அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட மாட்டார்கள் -ஸ்டீபன் ஸ்மித்

Read Time:3 Minute, 30 Second

அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் காப்பாற்றப்பட்ட, அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்படமாட்டார்கள் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்தோனேஷியா அவர்களை பொறுப்பேற்க மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் உள்ளது. அதற்கமைய கடற்பகுதியில் காப்பாற்றப்படும் மக்கள் இந்தோனேஷியாவுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவே தொடரும் என அவர் கூறியுள்ளார். மேலும் படகில் இருக்கும் இலங்கையர்கள் எந்த நாட்டுக்குச் செல்வது என அவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அவர்களுக்கு அந்த விண்ணப்பத்தை விடுக்க முற்றுமுழுதான உரிமை இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழ்கடலிலிருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதால் அது அவர்களின் தெரிவாக முடியாது. கடந்த 10 தினங்களுக்கு முன்னர் குறித்த 78பேரும் இந்தோனேஷிய கடற்பகுதியில் வைத்து அவுஸ்திரேலியாவின் ஓசியானிக் விக்கிங் என்ற சுங்கப் பிரிவு கப்பலினால் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தோனேஷியாவுக்கே அனுப்பி வைக்கப் பட்டதையடுத்து, அந்நாட்டு மாகாண ஆளுநர் இந்தோனேஷியா, அகதிகளைக் குவிக்கும் நாடல்ல எனத் தெரிவித்து அதனை மறுத்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவுஸ்திரேலியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தோனேஷியாவில் உள்ள டஞ்சாங் பினாங் குடிவரவு தடுப்புமுகாமில் மேற்படி அகதிகளை தங்கவைக்கும் வகையில் அவுஸ்திரேலிய கப்பல் அங்குள்ள கடற்படை தளத்துக்கு செல்லக்கூடுமென இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறான கடும் போக்கை அந்நாடு கடைபிடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட மாட்டார்கள் -ஸ்டீபன் ஸ்மித்

  1. இந்தோனேஷியா மாகாண ஆளுநர் இந்தோனேஷியா, அகதிகளைக் குவிக்கும் நாடல்ல எனத் தெரிவித்து அதனை மறுத்துள்ளார்

    இந்தோனேஷியா நல்ல உசாராக இருக்கிறது….
    அகதிகள் என்று அரவணைத்த நாடுகளுக்கு , எம் தமிழர் நன்றி காட்டிய விதம் எல்லோருக்கும் தெரியும்….

    அதி வேக பாதையை (HIGH WAY) முற்றிலுமாக முடக்கி பல மணித்தியாலங்கள் போக்குவரத்தை தடை செய்து சாதாரண மக்களை முகம் சுளிக்க வைத்தார்கள்..
    இந்த அதிவேக பாதையில் ஒரு விபத்து நடந்தாலே , மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் . நெரிசல், தாமதம்… எல்லாம் இவர்களுக்கும் தெரியும்….
    இது ஒரு உதாரணம் மட்டுமே…. இதுவா போராட்டம்??

    நம் செயல்களால் நாமே நமது இனத்தை நடுத்தெருவில் விட்டு விட்டோம்….யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளை எல்லா நாடுகளும் சந்தேக கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டன….

    இந்த லட்சணத்தில நாடு கடந்த தமிழ் ஈழம் என்று ஒன்று தொடங்கி.. மிச்சம் மீதி தமிழரையும் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்போறாங்கள்…

    என்று புலம் பெயர் தமிழர், இந்த செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுக்க தொடங்குகிறார்களோ அன்று தான் தமிழன் சுயமாக வாழ முடியும்…..

Leave a Reply

Previous post இராணுவ வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது -படைகளின் பிரதானி சரத்பொன்சேகா
Next post பம்பலப்பிட்டி கடலில் அடித்து மூழ்கடிப்பட்டவர் தமிழ் இளைஞர்.. பொலீஸ் உத்தியோகத்தர் கைது