இராணுவ வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது -படைகளின் பிரதானி சரத்பொன்சேகா
இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மைத்தன்மை குறித்து புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகளுடனான மோதலின்போது சுமார் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் படையினரில் 28000 பேர் காயமடைந்தனர். இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்திருக்காவிடின் என்னதான் இராணுவ தளபதியாக இருந்தாலும் , அரசியல் வாதியாக இருந்தாலும் இந்த வெற்றியை பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த 25ம் திகதி வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள விகாரையொன்றுக்குச் சென்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யுத்த காலத்தின்போது இராணுவத்தில் சுமார் ஒருலட்சம் பேர் இணைந்துகொண்டனர். அத்தொகையினர் இணைந்திருக்காவிடின் நாம் இன்னமும் வவுனியா பிரதேசத்திலேயே நின்று கொண்டிருந்திருப்போம். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது போயிருக்கும். பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஆசிர்வாதம் மற்றும் கௌரவம் போன்றவையே எமது வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்கியது. யுத்த வெற்றியின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அதனால் அனைத்தும் முடிந்துவிட்டது எனக்கூறி சந்தோசமாக காலத்தை கழிப்பதை நாம் விரும்பவில்லை. பிரபாகரன் என்றொருவர் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர் உருவாக்கப்பட்டார். இதனை மறந்துவிடுவதற்காக எமது பிரஜைகள் கடந்த 30வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டனர். நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டதுடன் சவால்களுக்கும் முகம்கொடுத்தோம். அவற்றிலிருந்து விடுதலைபெற எவ்வளவு கஷ்டப்பட்டோம். அர்ப்பணிப்புக்களை செய்தோம் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதால் நாட்டின் பாதுகாப்பு 100 வீதமாக முழுமையடைவில்லை. யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலமே பயங்கரவாதம் எனும் நோய்க்கிருமி மீண்டும் நுழைய விடாமல் தடுக்க முடியும். நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைதுசெய்யும் அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை மீளக்குடியேற்றி அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் வெற்றிகொண்ட யுத்தத்தில் வெற்றியை கண்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியும். அதனால் அந்த கொள்கையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்றும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
5 thoughts on “இராணுவ வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது -படைகளின் பிரதானி சரத்பொன்சேகா”
Leave a Reply
You must be logged in to post a comment.
உலக நாடுகள் உங்களுக்கு உதவா விட்டால் , நீங்கள் புலியின் ஒரு மயிரை கூட புடுங்கி இருக்க முடியாது….
ஹிஹி…….
விழுந்து மீசையில் மண் படவில்லை ..அதுவே பொது………………
தோல்வியை ஒப்புக்கொண்டு அதன் காரணங்களை ஆராய்பவனே வெற்றி அடைவான்……
விழுந்து மீசையில் மண் படவில்லை என்று சுய இன்பம் காண்பவன் மீதும் தோல்வியையே நோக்கி போகிறான்………
முள்ளிவாய்க்காலில் வெள்ளிபார்த்த வெங்காயத்தலையன்
உள்ளைவிட்டு வெளியைவிட்டு அடிப்பான் என்று
இனவெறியில் வெங்கிணாந்திகள் நாங்கள் நம்பியிருக்க
எங்கள் இரத்த உறவுகள் எல்லாம் அத்தனையும் இழந்து
இறந்தவர்களை கூட அரையும்குறையுமாக புதைக்க கூட
வழியே இல்லாமல் இரக்கம் கெட்ட நரபலிநரியர்களின்
இரத்தவேள்வி திருவிழாவில் இரத்த ஆற்றில் மூழ்கி
இன்று முகாம்களில் மூச்சு விட்டு கொண்டிருக்கையில்
நாங்களோ தமிழீழக் கனவு கலைந்ததால்
தூக்கம் கெட்டு அரை தூக்கத்தில் இருக்கிறோம்
சரத் பொன்சேகாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் கிடைத்த அமெரிக்க கிரீன்காட் கிரீன்காட் சுவீப்லொத்தரில் தானோ கிடைத்தது??????
ஆசை யாரைவிட்டது. ஜனாதிபதியாக வேண்டும் என்ற மோகம் பொன்சேகாவின் கண்ணை மறைக்குது.
புலிகள் பொன்சேகாவை படுகொலை செய்யமுயன்று படுகாயமடைந்த பொன்சேகா இன்று புலிகளின் நண்பன் ரணிலின் வலையில் விழுந்து தன்னை சல்வேசன் ஆமியைகூட வழிநடத்த முடியாத ஆள் என்று கூறிய (அவ) மங்கள் சமரவீரவின் ஆசியுடன் ஜனாதிபதி கதிரையில் குந்த பேராசைப்பட்டு தன தேசநலனை மீறிய தனநலமிக்க சுயரூபத்தை காட்டி புலிகளை ஒழித்ததில் வான்படைக்கும் கடற்படைக்கும் உள்ள பங்களிப்பையும் மறந்து ரணில் சந்திரிகா டீபீவிஜேதுங்க காலத்தில் செய்ய முடியாத புலிஒழிப்பு எவ்வாறு இத்தனை வெளிநாட்டு சக்திகளின் கடுமையான அழுத்தங்களுக்கும் மத்தியிலும் எவ்வாறு நடைபெற்றது என்றால் அது ராஜபக்சேயின் சாணக்கியமும் சாதுரியமும் அதி விவேக துணிவும்தான் காரணம். போர் நடக்கும் போது இலங்கை சிங்களவருக்கே சொந்தம் என இனவாதம் பேசிய பொன்சேகா இன்று இன்னொரு பிரபாகரன் உருவாகக் கூடாது என்று பிரபாவின் நண்பன் ரணிலின் கையை பிடித்து ஜனாதிபதி கதிரையில் குந்தலாம் என்ற பொன்சேகாவின் கனவு விரைவில் பொன்சேகாவை அமெரிக்கபிரஜை ஆக்குவதில் முடியும்.
தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டால் எல்லாப்பிரச்சனைகளும் முடிந்துவிடும். போராட்டமென்ற தேவையே இருக்காது. நன்றாக சிந்தியுங்கள் மோடையர்களே!!!!!!!