பம்பலப்பிட்டி கடலில் நபரொருவர் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்..!
கொழும்பு பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள கடலில் ஒருவர் மற்றொருவரால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பலர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. மூழ்கடிக்கப்பட்டவர் வழமையாக அப்பகுதியால் போகும் வரும் ரயில்களுக்கும் வாகனங்களுக்கும் கல்வீச்சு நடத்தி வருபவர் என்பதுடன் அவர் சற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இன்றுகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் கல்லெறிந்துவிட்டு கடலில் குதித்துள்ளநிலையில் கடலில் வைத்து ஒருவர் தடியால் அடித்து அவரை மூழ்கடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
Average Rating
8 thoughts on “பம்பலப்பிட்டி கடலில் நபரொருவர் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்..!”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
தமிழன் என்ற காரணத்தால் அவன் மனநோயாளியானாலும் மன்னிப்பில்லை…..
நாம் எல்லோரும் ஒருதாய் மாக்கள்… சபாஷ் மகிந்தா.
காட்டு மிராண்டிகளாக மாறிப்போன சிங்களவர்களின் வெளிப்படையான தோற்றம்,
இப்போது தெளிவாக புரியும் யார் இரக்கமற்றவர்கள் என்று. எம்மினம் கொத்துக் கொத்தாக கொன்று குவித்த போது கண்டு கொள்ளாத மனித இனம், இதையா பார்க்கப் போகிறது என்ன புதிதாக பொழுது போக்கிற்கு பார்ப்பதற்கு ஒரு வீடியோ கிடைத்திருக்கும்
மனித மிருகங்களுக்கு.
——————————————-
பம்பலப்பிட்டி கடலில் மூழ்கி மரணமான இளைஞர் தமிழர் என அடையாளம்: பொலிஸ் உத்தியோகத்தர் கைது (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 12:22.01 PM GMT +05:30 ]
நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது. இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார்.
இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சற்று முன்கிடைத்த செய்தி
சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளது
பம்பலப்பிட்டியில் நேற்று கடலில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட, இளைஞர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ரத்மலானையை சேர்ந்த 26 வயதான பாலவண்ணன் சிவக்குமார் என அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார்.
இவர் ஒரு மனநோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்கண்ட சாட்சியின்படி குறித்த இளைஞர் பம்பலப்பிட்டி கரையோர பிரதான வீதியில் நின்று வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார்.
இதன் போது வீதியில் சென்ற இராணுவ வாகனத்திற்கும் அவர் கல்லெறிந்துள்ளார். இந்தநிலையில் இராணுவ வாகனம் நிறுத்தப்படவே, அவர்,அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பாய்ந்து சென்றுள்ளார்.
இதன்போது, புகையிரதம் ஒன்று வரவே, அதற்கும் அவர் கல்லெறிந்துள்ளார்.உடனடியாக புகையிரம் நிறுத்தப்பட்டபோது இளைஞர் கடலில் குதித்துள்ளார்.
இந்தநிலையிலேயே பொதுமக்களில் இருவரும் பொலிஸ்காரர் ஒருவரும் கடலில் இறங்கி அவரை தாக்க முனைந்துள்ளனர். பொதுமக்களில் இருவர் குறித்த தமிழ் இளைஞரை பலமாக தாக்கியமையை தொலைக்காட்சி கமாரவின் மூலம் காணமுடிகிறது.
இளைஞர் தம்மை தாக்கவேண்டாம் என கும்பிட்டு கேட்டுக்கொண்டபோதும் அவரை கரைக்கு வரவிடாமல் பொதுமக்கள் இருவரும் தடிகளால் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலை சமாளிக்கமுடியாத இளைஞர் கடல் அலைக்கு மத்தியில் பின்னால் சென்ற போது அலை அவரை இழுத்துச் சென்றுள்ளது.
இந்தநிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார். இந்த மரணம் பலவந்தத்தினால் இடம்பெற்றதன் காரணமாக இதனை கொலை எனவே கருதவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மன நோயாளியிடம் வீரம் காட்டிய அதி வீரர்கள்…
வெட்கம்…
வீடியோவைப் பார்க்க
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=66349
எல்லா வீடியோ களையும் பார்ப்பதை தவிர சாதாரண பொதுமக்களால் என்ன செய்ய முடியும்..இது மட்டுமா….
கொத்து கொத்தாக குண்டு வீசி தமிழரை கொலைகள் செய்ததையும் பார்த்தோம்..
கொழும்பில் ரயிலிலும் பஸ்சிலும் குண்டு வைத்து அப்பாவி சிங்கள மக்களை கொலை செய்யும் போதும் பாத்தோம்.. (இதை கொஞ்சம் மகிழ்ச்சியோடு பாத்தோம் என்பது வேறு விஷயம்.)
எல்லாவற்றுக்கும் அரசியல் சாயமும் தமிழ் சிங்கள பகையையும் கூறாமல்,
இது ஒரு அப்பாவி பொதுமகனை அதுவும் மனநிலை பாதிக்கப்பட்டவரை சில காட்டு மிராண்டிகள் கொலை செய்துள்ளன…
சாதாரண மக்களால் பார்த்து கவலைப்படுவதை தவிர என்ன செய்ய முடியும்…?
ஆனால் மீடியா அப்படியல்ல.
மீடியா வில் இருப்பவர்கள் இதை பெரிது படுத்தி அம்பலமாக்க வேண்டும்..அது அவர்களால் முடியும்..
நிதர்சனம் இதை ஒரு சிறு செய்தியாக போட்டது முகவும் வேதனை அளிக்கிறது…
இதை செய்தவர்கள் எளிதில் தப்பித்து விடுவார்கள். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் மீடியா அதை விடக்கூடாது…
இதை படம் பிடித்து மீடியா இக்கு அனுப்பியவன் உண்மையில் ஒரு வீரன் தான்.
அவன் ஒரு சிங்களவனாக கூட இருக்கலாம்… அப்படித்தான் இருக்கும்…
எண்பதுகளில், தமிழர்கள் என்ற காரணத்தால் அவர்கள் கண்ணோயால் படுத்திருந்த போதும் அவர்கள் கும்பிட கும்பிட கொலை செய்து டயர் போட்டு எரித்த காட்டுமிராண்டிகளின் நினைவு தான் வருகிறது….
ஆனால் அந்த காட்டு மிராண்டிகள் இப்போது அழிந்தது போல , இதை செய்தவர்களும் ஒரு நாள் அழிந்து போவார்கள்…
தெய்வம் நின்றும் கொல்லும்.. நிச்சயமாக…..
ராஜீவ் காந்தியை தாக்கிய ராணுவச் சிப்பாய்கே தண்டனை வழங்காமல் அவனை தேசிய வீரனாக அறிவித்தவர்களா கடலில் தமிழ் இளைஞனை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப் போகிறார்கள்???
இங்கே சிலர் தமிழ்வின் செய்திகளை கொப்பி பேஸ்ட் பண்ணி வருகிறார்கள்…
கருத்துக்களை எழுதுங்கள், வேறு இணைய தள செய்திகளை போட்டு , இந்த கருத்து பகுதியை நிரப்ப வேண்டாம்…
அந்த செய்திகளின் URL ஐ மட்டும் தந்தால் , நாங்களும் வாசிக்கலாம்..