ஜோடியாக போய் விருது வாங்கிய பிரபு தேவா- நயன்… கொதிப்பில் ரமலத்!!

Read Time:3 Minute, 33 Second

nayan-prabhu2ஹைதராபாத்தில் நடந்த ஸ்டைல் விருது வழங்கும் விழாவில் ஜோடியாக மேடையேறி விருது வாங்கிய பிரபு தேவாவும் – நயன்தாராவும் பத்திரிகைகளுக்கு நீண்ட நேரம் போஸ் கொடுத்துள்ளனர். நயன் தாராவும் பிரபு தேவாவும் மிகத் தீவிரமாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் கல்யாணமாகாமலேயே தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன. இதை உறுதிப்படுத்துவது போல பிரபு தேவா மனைவி ரமலத்தின் சமீபத்திய பேட்டிகள் அமைந்திருந்தன. என் கணவரை அபகரிக்கப் பார்க்கிறார் நயன்தாரா. இன்னொரு முறை என் கணவருடன் அவர் சுற்றுவதைப் பார்த்தால் உதைப்பேன் என்று பேட்டி அளித்திருந்தார். இதனால் சென்னை வருவதைக் குறைத்துக் கொண்ட நயன்தாரா, படப்பிடிப்புக்காக மட்டும் ரகசியமாக வந்து, மாலையிலேயே கேரளா அல்லது ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி விடுகிறாராம். இந்த நிலையில் இந்தியில் பிரபுதேவா அடுத்து இயக்க உள்ள ‘மோஸ்ட் வாண்டட்’ படத்தில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பலமான பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ‘ஸ்டைல்’ சினிமா விருது வழங்கும் விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்று பரபரப்பு கிளப்பியுள்ளனர். இதில் என்ன பரபரப்பு வேண்டியிருக்கு என்கிறீர்களா… விருது கிடைத்ததென்னவோ பிரபு தேவாவுக்கு. சிவாஜி படத்தில் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக. அதைக் கொண்டாட அவருடன் ஜோடி போட்டுக் கொண்டு விழாவுக்கு வந்ததோடு, ஜோடியாக பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனராம். விழா முடியும் வரை அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தவர்கள், விருது அறிவிக்கப்பட்டதும் மேடைக்கும் ஜோடியாகவே போய் விருதை வாங்கியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு கொதித்துப் போயுள்ளாராம் பிரபுதேவா மனைவி ரம்லத். இவ்வளவு பிரச்சினை இருந்தும் நயன் – பிரபுதேவா இந்த அளவு பிணைந்திருக்கக் காரணம் திரையுலகில் ஒரு இயக்குனரும், வில்லன் நடிகரும்தான் என ஆதாரப்பூர்வமாக ரமலத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாம். எனவே தனக்கு ஆதரவாக உள்ள பெண்கள் அமைப்பினரைத் திரட்டி அந்த இருவர் வீட்டு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளாராம் ரமலத்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “ஜோடியாக போய் விருது வாங்கிய பிரபு தேவா- நயன்… கொதிப்பில் ரமலத்!!

  1. ஐயா பிரபுதேவா….
    மாதவியோடு இருக்கும் பொது சுகமாக தான் இருக்கும்…. உனக்காக இருப்பவள் உன் மனைவி தான்,,,

    இந்த நயன்தாரா,…. நேற்று சிம்பு… இன்று நீ…. நாளை…..
    மாட்டரை முடிச்சுட்டு எஸ்கேப் ஆவதே மேல்….. காதல் கீதல் எலாம் தேவையில்லை இவளோடு…

  2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர். (குறள் எண் :712)

Leave a Reply

Previous post இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணம்
Next post மத்துகம பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியசாலை ஊழியர் விளக்கமறியலில்..!