சிம்காட்டை கைப்பற்ற முனைந்தபோது அதைக்கடித்த கடற்புலி சந்தேகநபர் கைது

Read Time:1 Minute, 45 Second

கடற்புலி என சந்தேகிக்கப்படும் சந்தேகத்தில் வெலிக்கடைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்போராளி ஒருவரிடமிருந்து ஒரு செல்லிடத் தொலைபேசி பற்றரி ஒன்று சிம்காட்டுடன் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொதியை சிறைக்காவலர்கள் சோதனை செய்ய முயன்ற போது அதை இராஜேஸ்வரி மற்ற ஒரு சிறைக்கைதியிடம் கொடுத்துள்ளார். பின்னர் இரண்டாவது சிறைக்கைதி பெண்ணொருவரிடமிருந்து அதைக்கைப்பற்ற முனைந்த போது தாம் வைத்திருந்த சிம்காட்டை அவர் கடித்து சேதப்படுத்தி விட்டார் என்று தெரிகிறது. எனினும் சிறைக்காவலர்கள் சிம்காட்டை கடைசியில் கைப்பற்றினார்கள் ஆனால் சிம்காட் மூன்று துண்டுகளாக கடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு மற்றும் உள்வாங்கப்பட்ட தொலைபேசி அழைப்பு என்பவற்றையும் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கத்தையும் இனி கண்டறிவதில் மிகக் கடினமாக இருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3வயதுசிறுமியை வன்முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இருவருக்கு விளக்கமறியல்
Next post யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கான ஆரம்ப வரவேற்பு வைபவத்தை புறக்கணித்த தமிழ்க்கூட்டமைப்பினர்