இலங்கை அரசு புலிகளுக்கெதிரான யுத்தத்தின்போது கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதில்லை -இராணுவத்தளபதி

Read Time:1 Minute, 50 Second

இலங்கை இராணுவம் யுத்தநடவடிக்கையின்போது மனிதாபிமானமற்ற ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தவில்லையென இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிலக்கண்ணிவெடிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத்தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை இராணுவம் கொத்துக்குண்டு போன்ற மனிதாபிமானமற்ற ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை மோதலின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் இலங்கை இராணுவம் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரமே நிலக்கண்ணிவெடிகளை பயன்பத்தியது நிலக்கண்ணிவெடியை பயன்படுத்துவதை தடைசெய்யும் சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை ஆராயலாம் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான மோதலில் ஈடுபட்டிருந்தடையால் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாத நிலை காணப்பட்டது மோதல் முடிவடைந்து விட்டதால் இலங்கை தனது முன்னைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் நிலை உள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இலங்கை அரசு புலிகளுக்கெதிரான யுத்தத்தின்போது கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதில்லை -இராணுவத்தளபதி

  1. வெளிநாட்டில் வெறியில் இருக்கும் வெற்றுதலை வெங்கிநாந்திகள் நாங்கள்
    முள்ளிவாய்க்காலில் வெள்ளிபார்த்து கொண்டிருந்த வெங்காயத்தலையனை பப்பாமரத்தின் உச்சியில் ஏத்தி ஆதாளபாதாளத்தில் அம்மணமாக தள்ளிவிட்டு தமிழரை தலைநிமிர முடியாமல் பண்ணி விட்டோம்

Leave a Reply

Previous post அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராஜரட்னத்திடம் விசாரணை செய்ய இலங்கைக்குழு அமெரிக்கா செல்ல தீர்மானம்
Next post எமதுநாடு ஏனையவர்களின் குப்பைகளைக் கொட்டும் இடமில்லை -இந்தோனேசிய ரியோ தீவு ஆளுநர்