வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று

Read Time:1 Minute, 25 Second

வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது. இன்றுமுற்பகல் 10மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. நகரசபை தலைவர், உபதலைவர் உறுப்பினர்கள் என அனைவரும் வவுனியா நகரில் காணப்படும் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியாவிலுள்ள மக்களை மீள்குடியமர்த்துவது தொடர்பிலும், வவுனியாவிலிருந்து யாழ் செல்லும் மக்கள் போக்குவரத்தில் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்பது தொடர்பிலும், வவுனியா வைத்தியசாலைக்கு சென்று திரும்புகின்ற மக்களின் பாதுகாப்பு கெடுபிடிகள், வவுனியா நகரின் சுற்றாடல், சுகாதார விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை இன்றுமாலை 4மணியளவில் யாழ். மாநகரசபையும் தனது முதலாவது கூட்டத்தினை நடத்துகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணுவ அத்துமீறல்; -விசாரிக்க அதிபர் ராஜபக்சே திடீர் உத்தரவு!
Next post தாய்நாடு அழிவுக்குள் சென்றுக் கொண்டிருக்கிறது -சரத்பொன்சேகா தெரிவிப்பு