த்ரிஷாவை ஓரம்கட்டிய பிரம்மானந்தம்!!

Read Time:2 Minute, 5 Second

27-brammanandam-200தெலுங்கில் முன்னணி நடிகையான திர்ஷாவையே சம்பள விஷயத்தில ஓரம் கட்டிவிட்டார் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம். இங்கே வடிவேலு ரேஞ்சுக்கு தெலுங்கில் கலக்கி வருபவர் பிரம்மானந்தம். முன்னணி நடிகர்கள் அனைவரும், தங்கள் படங்களில் பிரம்மானந்தம் கட்டாயம் இருக்க வேண்டும் என நிபந்தனையே விதிக்கின்றனராம். தமிழில் கில்லி, மொழி, சரோஜா போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் – தெலுங்கில் அவருக்கு கிடைத்துவரும் வரவேற்பைப் பார்த்த தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் முன்பே சம்பளத்தை அள்ளித் தருகிறார்களாம். நமோ வெங்கடேசா என்ற தெலுங்குப் படத்தில் நடிக்க பிரம்மானந்தத்துக்கு நாளொன்றுக்கு ரூ 3 லட்சம் என நிர்ணயித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு மொத்தம் ரூ.80 லட்சத்துக்குமேல் தரப்பட்டதாம் பிரம்மானந்தத்துக்கு. ஆனால் த்ரிஷாவுக்கு இதைவிட குறைவாக ரூ.60 லட்சம்தான் சம்பளமாகத் தந்தார்களாம். பொதுவாக தமிழ்ப் படங்களில் தான் கதாநாயகியை விட நகைச்சுவை நடிகருக்கு மவுசு கூடுதலாக இருக்கும். இங்கே நடிகர் வடிவேலு மட்டும் ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ.7 லட்சம் வாங்குகிறாராம். சில நேரங்கலில் ரூ.5 லட்சத்துக்கும் ஒப்புக் கொள்கிறாராம், தயாரிப்பாளரைப் பொறுத்து. இந்த நிலை இப்போது தெலுங்கிலும் உருவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படலாம்
Next post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கையில் முனைப்பு