தங்கத்தை சுமக்கும் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.!

Read Time:2 Minute, 22 Second

indramesh-wanjale-1மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் புதிய எம்எல்ஏவான ரமேஷ் வாஞ்சிலே தனது கழுத்திலும் கைகளிலும் 2.35 கிலோ தங்க நகைகள அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் வலம் வந்தார். இவருடம் இவரது மனைவியும் இதே அளவுக்கு தங்க நகைகளுடம் வலம் வந்தார். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடியது. பிரச்சாரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தங்கம் பார்ப்பதற்காக வரும் கூட்டமெல்லாம் ஓட்டு போடும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கமேண்ட் அடித்தார். ஆனால் ரமேஷ் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். வெற்றி பெற்றதும் தனது கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே சந்திக்க மும்பை வந்தார். அப்போது ரமேஷ் வாஞ்சிலேவிடம் இனி நகைகள் அணிந்து வெளியில் திரியக் கூடாது என்று கண்டித்தார் ராஜ். ஆனால், ராஜ் கண்டித்தும் நகையைக் கழற்றவே இல்லை ரமேஷ். மாலை லோனாவாலாவில் உள்ள எக்வீரா கோவிலுக்கு சென்றபோதும் நகைகளை அள்ளி அணிந்தபடியே வந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் தேர்தல் செலவுகளுக்காக நகைகளை அடகு வைத்து விட்டேன் என்றோ தேர்தலுக்காக அடுத்தவர்களிடம் இருந்து ஓசிக்கு வாங்கி அணிந்து கொண்டேன் என்றோ மக்கள் நினைக்கக் கூடாது அதனால் தான் நான் நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டு இருக்கிறேன். சாகேப்பிடமும் (ராஜ் தாக்கரே) நான் இதை கூறியிருக்கிறேன் என்றார். லோனாவாலாவில் இவரை நகைகளுடன் பார்த்த ராஜ் தாக்கரே டென்சனாகி, இனி நகைகளை அணிந்து வரக்கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் முன் மீண்டும் கண்டித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கையில் முனைப்பு
Next post உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினர் கைது