நைஜீரியா நாட்டில் எண்ணைக்கம்பெனி ஊழியர்கள் 8 பேர் விடுதலை 2 நாட்களுக்கு பிறகு கடத்தல்காரர்கள் விடுவித்தனர்

Read Time:1 Minute, 11 Second

Nigeria.jpgஆப்பிரிக்காவில் நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணை கம்பெனியில் வேலைசெய்து வந்த இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த 6 பேரையும் மற்றும் அமெரிக்கர், கனடா நாட்டுக்காரர் ஆகியோரையும் சிலர் கடத்திக்கொண்டு போய்விட்டனர்.

கடற்கரையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் உள்ள பல்போர்டு டால்பின் எண்ணைக்கிணறுகளில் இரவு நேரத்தில் அவர்கள் வேலை செய்தபோது அங்கு 4 வேகப்படகுகளில் வந்த 30 கடத்தல்காரர்கள் துப்பாக்கிமுனையில் 8 ஊழியர்களை கடத்திச்சென்றனர். அவர்களை ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர். உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கடத்தப்பட்டனர். 2 நாட்களுக்குப்பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவு மும்பையில் ரூ.500 கோடி போதைப்பொருள் சிக்கியது
Next post பலத்த கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள்