பிரபாகரன், படையினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்த செய்தியை மறுக்கிறது அரசு

Read Time:2 Minute, 42 Second

புலிகளின் தலைவர் பிரபாகரன், படையினரிடம் சரணடைந்த பின்னர் அவரை படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது. கடந்த மே மாதம் 18ம் திகதி பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை தெரிவித்துள்ளது. இச் செய்தியிலேயே பெரும் சர்ச்சை நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா கார்டியன் என்ற இணையத்தளம் புதிய செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாகரன் படையினரிடம் சரணடைந்தார். அவரை படையினர் சித்திரவதை செய்து பின்னர் படுகொலை செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தின்போது தப்பி நாட்டைவிட்டே வெளியேறிய பிரபாகரனின் மெய்க்காவலர் ஒருவர் கூறிய தகவல், இலங்கை உளவுப் பிரிவிலிருந்து சேகரித்த தகவல், பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல் ஆகிய மூன்று தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிடுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. ஆனால், இதை அரச பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை படையினரைப் போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த நடத்தப்படும் சதிவேலைகள் இவை. இது வெறும் கட்டுக்கதையே. படையின் மூத்த அதிகாரிகளின் கௌரவத்தைக் குலைக்கும் செயல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையைத் தாக்கல்செய்தது. அதில், போரின் கடைசிக் கட்டத்தின்போது, புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சரணடைய முன்வந்து படையினரை அணுகினர். ஆனால் அவர்களை படையினர் கொலை செய்து விட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரபாகரன் சரணடைந்தார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “பிரபாகரன், படையினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்த செய்தியை மறுக்கிறது அரசு

  1. இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், உலக நாடுகள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில், முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு மழையில் நனைந்து கொண்டு திருவிழா நடத்தி வருகிறார். இந்த கொடுமை வேறு எங்காவது நடைபெற முடியுமா?

    இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட 20 ஆயிரம் உடல்கள் சரிவர மண்ணில் மூடப்படாத நிலையில் எலும்புகள் மேலே நீட்டிக்கொண்டிருக்கும் செய்தியை லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிடுகிறது. ஆனால், இங்கு பத்திரிகைகளை மிரட்டி தனக்கு ஆதரவாக வைத்துள்ளனர்.

    லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை நடந்து இருக்கிற வேளையில், நான்கு நாட்களில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை பெற்று தந்த முதல்வர் வாழ்க என்று நோட்டீஸ் அடித்து ஒட்டுக்கின்றனர். இவர்கள் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள்.

    முள்கம்பி வேலிக்குள் அடைப்பட்டு கிடக்கின்ற ஈழத்தமிழர்களை வெளியேற்றப்படுவது மட்டும் தீர்வாகாது. அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஈழத்தமிழர்களை முள்வேலிக்குள் அடைபடும் சூழ்நிலையை ஏற்படுத்தியது இந்திய அரசு. ஆயுத உதவி செய்ததும் இந்திய அரசு. அதனால் தான் புலிகள் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமார் உள்ளிட்ட 14 பேர் தீக்குளித்தனர். அதற்காக கருணாநிதி ஒரு வார்த்தைக்கூட இரங்கல் எழுதவில்லை. மாறாக உண்ணாவிரத நாடகம் நடத்தி பிரச்சனையை திசை திருப்பினார்.

  2. மத்தவன் பெயரில் எழுதுவதே இந்த புலி வால்களின் வேலையாக போச்சு…
    ராசா… உண்ட சொந்த பெயரில எழுது… ஹிஹி…

    இருந்தாலும் பரவாயில்லை……

  3. மற்றவன் பெயரில் எழுதும் உனது மன நோயை என்னவென்று சொல்வது….

    லட்சம் தமிழரின் மரணத்துக்கு பாழாய்போன புலிகள் தான் காரணம்
    அழிந்து விட்டார்களே அதுவே சந்தோசம்…

Leave a Reply

Previous post காதலனை தீ வைத்து எரித்த 8ம் வகுப்பு மாணவி
Next post ராணுவ அத்துமீறல்; -விசாரிக்க அதிபர் ராஜபக்சே திடீர் உத்தரவு!