சரத்பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளனர்

Read Time:1 Minute, 54 Second

இலங்கை கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகாவும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள குரோன் பிளாசா ஹோட்டலில் நேற்றுமுன்தினம் 25ம்திகதி இரவு இடம்பெற்றுள்ளது இதன்போது இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரத்பொன்சேகாவின் பெயர் எதிர்கட்சியின் பொது ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் பேசப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சரத்பொன்சேகா கடந்த 24ம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்ற நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை சரத்பொன்சேகாவுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் முறுகல் ஏற்படக்கூடிய வகையில் செற்படும் ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது. இதேவேளை சரத்பொன்சேகா நாட்டில் இருந்து வெளியேறுமுன்னர் அவரை சிங்ஹல உறுமயவின் தலைவர் எல்லாவல்ல மேதானந்ததேரர் மற்றும் உடுவே தம்மாலோக தேரர் ஆகியோரும் சந்தித்து ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜீத், ஜெயம் ரவிக்கு; பெப்ஸி ரெட் கார்டு?
Next post திருகோணமலை இடைதங்கல் முகாமில் 65விடுதலைப்புலி உறுப்பினர்கள்..