தாய்நாடு அழிவுக்குள் சென்றுக் கொண்டிருக்கிறது -சரத்பொன்சேகா தெரிவிப்பு

Read Time:2 Minute, 33 Second

தாய்நாடு அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது இதனை மாற்றியமைக்கப் போவதாக இலங்கையின் கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகா அமெரிக்காவில் வைத்து தெரிவி;த்துள்ளார். அமெரிக்க வாஷிங்டனுக்கு விஜயம் செய்துள்ள அவர் பௌத்த ஆலயம் ஒன்றுக்கு சென்ற போதே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த கருத்து சரத்பொன்சேகா அரசியலில் ஈடுபட போவதற்கான கட்டியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய வி;க்கிரமசிங்க மற்றும் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டார ஆகியோர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பௌத்த ஆலயத்தின் தலைமை பிக்கு மஹரகம தம்மஸ்ரீ தேரர் சரத்பொன்சேகாவுக்கு ஆசி வழங்கியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த சரத்பொன்சேகா அனைவரும் வன்னியில் யுத்தவெற்றியை பற்றி பேசுகிறார்கள் அங்கு இடம்பெற்ற இறுதி 10நாள் யுத்தத்தில் விடுதலைப்புலிகளினால் 5000 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்காவிட்டால் யுத்தம் நிறைவு பெற்றிருக்காது. எனவே அவர்களுக்கு நாம் முதலில் வணக்கம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யப்பட வேண்டும். மீண்டும் நாம் ஒரு பிரபாகரன் தோன்றுவதற்கு வழிவகுத்து விடக்கூடாது. நாம் நாட்டை பிழையான வழியில் செல்ல அனுமதிக்க கூடாது. எனவே நாட்டை சரியான வழியில் நடத்திச்செல்ல நாம் தயாராக இருப்பதாகவும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தாய்நாடு அழிவுக்குள் சென்றுக் கொண்டிருக்கிறது -சரத்பொன்சேகா தெரிவிப்பு

  1. இன்னொரு பிரபாகரன் இனி தோன்ற முடியாது…தமிழ் மக்கள் அதற்க்கு இனி இடம் கொடுக்க மாட்டார்கள்…
    முப்பது வருசமாக பட்ட வேதனையை இலங்கை தமிழர் மறக்க மாட்டார்கள்…

    ஆக நிச்சயமாக இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாக வாய்ப்பில்லை..
    வேண்டுமானால் புலம் பெயர் நாடுகளில் உருவாகலாம்.. அது தான் உருவாகி விட்டார்களே….
    ஆனாலும் சரத் பொன்சேக பயப்பட தேவையில்லை… புலிகள் பெயரில் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே இந்த பிரபாகரன்கள் உருவாகியுள்ளார்கள்….
    மாற்றியதும் மறைந்து போவார்கள்.

    நல்லவனோ கெட்டவனோ, மாற்று கருத்து எனக்கு இருந்தாலும்…. பிரபாகரனை போல ஓர் வீரன் இனி உருவாக முடியாது… இப்ப உள்ளவங்கள் எல்லாம் கள்ள கூட்டம்…..

Leave a Reply

Previous post வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று
Next post நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படலாம்