புலிகளின் கடற்போக்குவரத்து இன்னும் இடம்பெறுகிறது -ரோஹான் குணரட்ண

Read Time:2 Minute, 6 Second

குளோப் அண்ட் மெயில் கனடியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இலங்கை இராஜதந்திரி ஜெனரல் பந்துல ஜெயசேகர 76இலங்கை அகதிகள் கனடாவுக்கு வருவதை அங்குள்ள சில தமிழர்கள் தெரிந்து வைத்திருந்ததாகவும் ஏனெனில் அகதிகள் சிலரிடம் கனடாவிலுள்ள உறவினர்கள் தொலைபேசி இலக்கங்கள் இருந்தன என்றும் கூறினார். எனவே இந்த பயணம் நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறினார். இந்த அகதிகள் குறித்து பயங்கரவாத எதிர்ப்பு திட்ட நிபுணர் ரொஹான் குமார் குணரட்ன கருத்து தெரிவிக்கும் போது இந்த கப்பல் ஜப்பானில் கட்டப்பட்டது என்றும் இந்த கப்பல் விடுதலைப்புலிகளுக்கு துப்பாக்கிகள் கடத்துவதில் புகழ்பெற்றது என்றும் தெரிவி;த்துள்ளார். கடந்த வருடம்வரை இலங்கையில் சிறிய வான்படை மற்றும் கடற்படையுடன் ஆதிக்கம் செலுத்திய விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் சிலர் இந்தியாவுக்கும் தெற்காசியாவுக்கும் தப்பிச் சென்றுள்ளனர். இப்போதும் புலிகளின் கடல்வழி கடத்தல் வலையமைப்பு பயங்கரவாத சட்டங்கள் நடைமுறையில் இல்லாத உயர்கடல்களில் முற்றுமுழுதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வேறு ஏதாவது கப்பல் கனடாவை நோக்கி வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் புலிகளின் குறைந்தது ஒரு கப்பலாவது இனியும் கனடா நோக்கி வரும் சாத்தியம் உள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலை இடைதங்கல் முகாமில் 65விடுதலைப்புலி உறுப்பினர்கள்..
Next post போலிதகவல்கள் வழங்கிய அரசசார்பற்ற அதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளனர்