காதலைரை தேடிச்சென்ற இலங்கைப்பெண் இந்தியசிறையில் அடைக்கப்பட்டு விடுதலை

Read Time:2 Minute, 24 Second

நிசாராணி என்ற இலங்கை பெண் ஒருவர் போலிகடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய ஆந்திர பிரதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனினும் அவர் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இவருக்கு மூன்று வருடங்கள் சிறைதண்டனை வழங்கப்பட்ட போதிலும் அவரின் நன்னடத்தை காரணமாக இரண்டு வருடங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இவர் தமது காதலரை தேடிவந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனினும் இ;ன்னும் அவருடைய காதலரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் குவைத்தில் பணியாற்றிய போது ஆந்திர பிரதேசத்தின் கடப்பா நகரில் உள்ள ஒருவரை காதலித்துள்ளார். எனினும் குறித்த காதலர் நிசாவுக்கு சொல்லாமலேயே ஆந்திர பிரதேசத்திற்கு திரும்பி விட்டார் இதனையடுத்தே நிசாராணி குறித்த காதலரை தேடி ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளார் இதன்போதே போலிகடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதானார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரை சென்னை விமான நிலையத்தின் ஊடாக அவசர விஸா மூலம் இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டது எனினும் விமானத்தில் பயணிக்க மறுப்பு தெரிpவித்த நிசாராணி தாம் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த சூழ்நிலையில் விமானமும் இலங்கைக்கு புறப்பட்டு செல்லவே நிசாராணி சென்னையில் உள்ள உயர்ஸ்தானிகரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிள்ளையானின் பாதுகாப்பு வகனம் மோதியதில் மூவர் பலி
Next post முன்னாள் விடுதலைப்புலி சந்தேக நபர் அக்கரைப்பற்றில் கைது