ஐ.நாவின் அமைதிகாக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும் -இலங்கை அரசாங்கம்

Read Time:1 Minute, 20 Second

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக அதிகளவு படைவீரர்களை அனுப்ப முடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள காரணத்தினால் அதிகளவிலான படைவீரர்கள் வெளிநாட்டு இராணுவப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என தெரிவி;க்கப்பட்டுள்ளது. ஹெய்டி போன்ற நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் இலங்கை படைவீரர்கள் பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் இராணுவ வீரர் ஒவ்வொருவரும் தலா 1000 அமெரிக்க டொலர்கள் மாதாந்த சம்பளமாக பெற்றுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடதக்கது.  இனிவரும் காலங்களில் விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களும் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துணுக்காய் பகுதிக்கு மேலும் ஆயிரம் பேரை அனுப்பி வைக்க ஏற்பாடு
Next post கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரனும் மனைவியும் விடுதலை