அஜீத், ஜெயம் ரவிக்கு; பெப்ஸி ரெட் கார்டு?

Read Time:2 Minute, 0 Second

ஃபெப்சி அமைப்பு நடத்திய மூன்று நாள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்காக அஜீத், ஜெயம் ரவி உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என கூறத் தொடங்கியுள்ளார்களாம் அந்த அமைப்பின் நிர்வாகிகள். அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் சென்னையில் சமீபத்தில் மாநாடு நடந்தது. முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். இந் மாநாடு நடப்பதையொட்டி மூன்று நாட்கள் சினிமாவின் அனைத்து பிரிவுகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தன ஃபெப்சி மற்றும் இதர அமைப்புகள். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தாலும், இந்த மூன்று தினங்கள் மட்டும் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதையும் மீறி நடிகர் அஜீத் தனது அசல் படப்பிடிப்பில் பங்கேற்றாராம். இதனால் ஃபெப்சி விழாவுக்கு அவர் வரவில்லையாம். அடுத்து நடிகர் ஜெயம் ரவியும் மலேஷியாவில் நடந்த தில்லாலங்கிடி படத்தில் பங்கேற்றாராம். இளம் நடிகரான நகுலும் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தாராம். இதனால் கடுப்பாகிவிட்ட ஃபெப்சி அமைப்பினர் இந்த மூன்று நடிகர்களுக்கும் ரெட் கார்டு போடலாமா என ஆலோசித்து வருகின்றனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் -இயக்குநர் சீமான்.
Next post சரத்பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளனர்