தனது நிர்வாண படத்தை வெளியிட்ட ஆசிரியை

Read Time:2 Minute, 38 Second

rachel-whitwell200தனது நிர்வாண புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட ஆசிரியை சிக்கலில் மாட்டியுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்தவர் 26வயதாகும் ரேச்செல் ஒயிட்வால். இவர் ஆஸ்திரேலியாவின் பென்ட்ஹவுஸ் என்ற இதழின் இணையதளத்தில் இடம் பெற்ற நியூ ஆஸி பேப்ஸ் என்ற பகுதியில், தனது நிர்வாணப் படங்கள் இடம் பெறக் கொடுத்தார். அது முதல் அவருக்கு ஆபாசப் படங்கள் மீது நாட்டம் பிறந்தது. லெக்ஸி என்ற பெயரில் அவரது படங்கள் இணையதளத்தில் வெளியாகின. அதில் பியானோ முன்பு நிர்வாண கோலத்தில் முழங்கால் இட்டபடி அமர்ந்திருப்பது, குளிப்பது போன்ற போஸ்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அந்த இணையதளத்தில், நான் 26 வயதாகும் பள்ளி ஆசிரியை, கல்யாணமாகவில்லை. நியூசிலாந்தைச் சேர்ந்தவள். மாடலிங் செய்ய விருப்பம் கொண்டுள்ளேன்.சொந்தமாக போல் டான்ஸிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். காதல், காமக் கதைகளை நிறைய எழுதியுள்ளேன் என்று எழுதியுள்ளார் ரேச்செல். இவர் நியூசிலாந்தின் மிகப் பெரிய பணக்காரரான ஸ்டீவ் குரோ என்பவரின் தோழியும் ஆவார். இவரது செயலால் நியூசிலாந்து பெற்றோர்கள் பெரும் கோபமும், கவலையும் அடைந்துள்ளனர். இதுகுறித்து நியூசிலாந்து ஆசிரியர் கவுன்சிலுக்குப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து அவரை ஆசிரியை பணியிலிருந்து தடை செய்து விடலாமா என்ற ஆலோசனையில் கவுன்சில் ஈடுபட்டுள்ளது. ஆனால் தனது ஆபாசப் படங்களை ஆஸ்திரேலியாவில் மட்டுமே பார்ப்பார்கள், நியூசிலாந்தில் யாரும் பார்க்க மாட்டார்கள். எனவே இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார் ரேச்செல். மேலும், எனது நிர்வாணப் படங்களால், நான் ஒரு நல்ல ஆசிரியை என்பதை மாற்றி விட முடியாது என்றும் கூறியுள்ளார் ரேச்செல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளவத்தையின் பாமன்கடை பகுதி வீடொன்றுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு
Next post யாழில் அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது