400கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை புலிகள் இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் -இந்திய ஊடகம் தெரிவிப்பு

Read Time:1 Minute, 26 Second

விடுதலைப்புலிகள் அமைப்பு சுமார் 400கோடிரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் அசாம் விடுதலைப் போராளிகளுக்கே புலிகள் அதிகளவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர் அண்மையில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையொன்றின் போது அசாம் போராளிகளிடமிருந்து மீட்கப்பட்ட இராணுவ ஆவணங்களின் மூலம் இந்த ஆயுதகொடுக்கல் வாங்கல் விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்படு முன்னர் இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பாரிய யுத்தமொன்றை முன்னெடுத்து வரும் சந்தர்ப்பத்தில் பெருந்தொகையான ஆயுதங்களை இந்திய கிளர்ச்சியாளர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “400கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை புலிகள் இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் -இந்திய ஊடகம் தெரிவிப்பு

  1. வெள்ளி பார்த்த வெங்காயங்களின் சுத்துமாத்து பம்மாத்து பிணக் கணக்கை காட்டி கோடி கோடியாய் காசுசேர்த்து சொகுசா வாழ்வு பூமிக்கே பொறுக்காதலால்தான் கூண்டோடு ஒண்டுமில்லாமல் அழிந்து போனது.
    திமிர் பிடித்த திருகுதாள திருவிழா ஓய்ந்ததால் ஐந்து மாசமாக பிள்ளைகள் எல்லாம் பலி ஆடுகளாக பலியாகாமல் இருக்கிறார்கள்.

Leave a Reply

Previous post படகு கைப்பற்றப்பட்டதையடுத்து பெரியகல்லாறில் பாரிய தேடுதல் நடவடிக்கை
Next post கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு பாடசாலைகளில் தங்கவைப்பு