உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதில்லையென தமிழ் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவிப்பு

Read Time:1 Minute, 30 Second

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத்தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து, இலங்கையில் பலத்த விமர்சனம் இருப்பதாக தெரிவித்த சிவத்தம்பி அவர்கள், இந்நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வது சிரமமான விடயமாக இருக்குமென்றும் கூறியுள்ளார். தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் சிவத்தம்பி கூறியுள்ளார். உலகத் தமிழர்; தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இவ்விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக தெரிவித்து கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5சந்தேகநபர் மீது தீவிர விசாரணை
Next post தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்