சிரிப்பதற்காக அழுத சபாநாயகர் லொக்குபண்டார..

Read Time:2 Minute, 27 Second

சபாநாயகரான எனக்கு இந்த சபையில் சிரிப்பதற்கு கூட உரிமை இல்லையா? என எதிர்கட்சி உறுப்பினர்களைப்பார்த்து வி.ஜே.மு.லொக்குபண்டார நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்களுக்கு அமைச்சர் மேர்வின்சில்வா தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவை சபையில் இருந்து வெளியேற்றுமாறு ஐ.தே.கட்சி எம்பிக்கள் பலமுறை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வா ஏதோ கூறினார். இதனையடுத்து சபாநாயகர் சிரித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த ஐ.தே.கட்சி எம்பி ரவி கருணாநாயக்க “நாங்கள் முறையிடுகிறோம் நீங்கள் சிரித்துக் கொண்டிக்கிறீர்கள்” என்று சபாநாயகரைப் பார்த்து கூறினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் “ஏன் சபாநாயகரான எனக்கு இந்த சபையில் சிரிப்பதற்குகூட உரிமை இல்லையா?வெனவும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளும் அவரது பேச்சும் எனக்கு சிரிப்பினை ஊட்டுகின்றன எனது அப்பாவித்தனத்தை பலவீனமாக நினைக்க வேண்டாம் இதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார். இதன்போது எழுந்த ரவி கருணாநாயக்க எம்பி “உங்களை அப்படி நினைத்து தான் நியமித்தோம் எமது உரிமைகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” எனக்கூறினார். எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த சபாநாயகர் “என்னை நீங்கள் நியமிக்கவில்லை இந்த சபையே என்னை நியமித்தது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பா.நடேசன், புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டது உண்மையே -பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி
Next post ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு பெருமளவு நிதி வழங்கியமை கே.பி மூலம் அம்பலம்