பௌத்த விகாரையொன்றினுள் புதையல் தோண்டிய பிக்கு கைது

Read Time:1 Minute, 36 Second

பௌத்த விகாரையொன்றினுள் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பிக்கு ஒருவரும் இன்னும் சிலரும் அம்பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் பலரின் உதவியுடன் விகாரையின் உட்பகுதியில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் பொலிஸார் திடீரென முற்றுகையிடவே சிலர் தப்பியோடி விட்டதாகவும் பிக்குவும் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிமல் மெதிவக்க தெரிவிக்கையில் பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றின் போதே தேராபுத்தபாய விகாரையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தவேளையில் பொலிஸார் பிக்குவை கைது செய்தனர் சந்தேகநபரான பிக்குவின் வழிகாட்டலின் பேரில் 9அடி ஆழமான குழியொன்று தோண்டப்பட்டிருந்தது இந்த வேலைக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அம்பலாங்கொடை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் -தமிழ் கூட்டமைப்பு
Next post புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் யாழ். விஜயம்..