தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் -திவயின பத்திரிகை

Read Time:1 Minute, 33 Second

தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பை அமைக்கும் பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்;.எப் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளின் போது கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்ட ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தமிழ்பேசும் கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் -திவயின பத்திரிகை

  1. நாங்கள் எப்படி எல்லாம் நாடுவிட்டு நாடு ஓடினோம் என்பதற்கு பிரித்தானிய புள்ளிவிபர ஆதாரங்களை பாருங்கள். 160 வருடங்களுக்கு முன் 1834கும் 1870கும் இடையில் அதாவது 36 வருட காலத்தில் மதராஸ் பகுதியில் இருந்து மட்டும் 14 லட்சம் பேர் வடஇலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அதே காலப்பகுதியில் 8 லட்சம் பேர் வடஇலங்கையில் இருந்து மதராஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆகவே இந்த 36 வருடங்களில் மட்டும் 6 லட்சம் பேர் மேலதிகமாக வடஇலங்கையில் குடியேறி உள்ளனர்.
    இதில் கேரளா, திருநெல்வேலி, ராமநாதபுர பகுதிகளில் இருந்து வந்தவர்கள் உள்ளடங்கவில்லை. அவர்களையும் சேர்த்தால் குடியேறியவர்களின் தொகை பத்து லட்சத்தையும் தாண்டி விடும்
    150 வருடங்களுக்கு முன் தென் கிழக்காசியாவில் உள்ள சகல பிரித்தானிய துறைமுகங்களிலும் தமிழர்தான் வேலை செய்தனர். பீஜீ, கயானா, ஜாவா, கம்போடியா, மொரீசியஸ், தென் ஆபிரிக்கா என்றெல்லாம் 150 வருடத்திற்கு முன் திரவியம் தேடி போனவர்கள் எம் முன்னவர்கள். ஜப்பான்காரனுக்கு ஜப்பான் சொந்தம் ஜேர்மன்காரனுக்கு ஜேர்மன் சொந்தம் பிரெஞ்சுகாரனுக்கு பிரான்ஸ் சொந்தம் சீனாக்காரனுக்கு சீனா சொந்தம் கொரியர்களுக்கு கொரியா சொந்தம்
    எங்களுக்கோ இந்த பூமியே சொந்தம் யாதும் ஊரே யாதும் கேளீர்.

Leave a Reply

Previous post தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவிகள் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவிப்பு
Next post கடன்; 2 குழந்தைகளை எரித்து பெண் தற்கொலை