கனடாவில் கைதானவர்கள் விசாணைக்காக வன்கூவர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்..
கனடாவின் மேற்கு கரையோரப்பகுதியில் கப்பல் ஒன்றுடன் கடந்தவார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளென சந்தேகிக்கப்படும் குழுவினர் கப்பலுடன் விக்டோரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து பஸ்களில் மேல்விசாரணைக்காக வன்கூவர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை போட்றென்ஃபுஸ் துறைமுகத்திற்கு அருகில் வைத்து ஓசன் லேடி என்ற இந்த கப்பலை கனடிய பொலிஸார் சோதித்தபோது அதற்குள் 76 ஆண்கள் இருந்துள்ளனர். கனடிய எல்லைச்சேவை நிறுவன அதிகாரிகளும் பொலிஸாரும் இக்குழுவினரைப் பற்றியோ அவர்கள் எவ்வாறு கனடா கடற்பரப்புக்குள் காணப்பட்ட கப்பலுக்குள் வந்தார்கள் என்பது பற்றியோ அவர்களது சொந்த நாடு எது என்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து, சட்டவிரோதமாக ஆட்கள் கனடாவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள் என்றும் அவர்கள் அகதிஅந்தஸ்து கோர இருக்கும் இலங்கைத் தமிழர்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இவற்றில் எதையும் உறுதிப்படுத்தவில்லை. வான்கூவரில் உள்ள விசாரணைப்பிரிவு ஒன்றுக்கு இவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்த எல்லைச் சேவைகள் முகவர்நிலைய அதிகாரி றோப் ஜோன்ஸன், இவர்களை கனடாவிற்குள் அனுமதிப்பது பற்றி தொடர்ந்து விசாரணை நசடத்தப்படும் என்றும் ஞாயிற்றக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இவர்களது உடனடித் தேவைகள் பற்றியும் சுகாதாரநிலை பற்றியும் விரைந்து ஆராயப்படுவதாக தெரிவித்த ஜோன்ஸன் கனடிய சட்டதிட்டங்களுக்கு அமைய அவர்கள் உன்னிப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஓசன் லேடி கப்பலை கனடிய கடற்படையினர் கண்டதும் ஆயுதமேந்திய கனடிய பொலிஸார் கப்பலுக்குள்ஏறி அதனை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர். பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலுக்குள் இருந்தவர்கள் சிவில்உடைகளில் காணப்பட்;டனர். சிலர் சேர்ட்டுக்கள் அணிந்திருக்கவில்லை. அவர்கள் மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரை பார்த்து கைகளை அசைத்தமை படங்களில் தெரிந்தது. நல்ல தேகாரேக்கியத்துடன் காணப்பட்டார்கள். கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து நம்பப்படுவதாக கனடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் வேன்லோன் தெரிவித்தபோதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. கனடிய தமிழ் காங்கிரஸை சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை அளித்த பேட்டி ஒன்றில், ஊடகங்களில் வெளியான படங்களில் கப்பல் அகதிகளை பார்த்தபோது அவர்கள் தமிழர்களாக இருக்கலாமென தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். அவர்களது முகங்களையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்தபோது அவை தமிழர்கள் அணியும் பைஜாமா ஆடைகள்போலத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.
2 thoughts on “கனடாவில் கைதானவர்கள் விசாணைக்காக வன்கூவர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்..”
Leave a Reply
You must be logged in to post a comment.
இலங்கையில் இருந்து அண்மையில் அவுஸ்திரேலியா சென்று அகதி கோரிய அலெக்ஸ் என்ற தமிழர் அங்கு தனது அகதிக் கோரிக்கைக்கு மூன்று காரணங்களை சொன்னார். இலங்கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கற்பளிக்கப்படுவதாகவும் தமிழர் இலங்கையில் உழைத்து குடும்பத்தை காப்பாற்ற முடியாதலால் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இலங்கையில் விட்டு விட்டு இருபதாயிரம் டாலர் கொடுத்து அவுஸ்திரேலியா போய் சேர்ந்ததாக.ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்
இலங்கையில் சித்திரவதையும் கற்பழிப்பும் நடப்பதானால் எப்படி தன மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இலங்கையில் விட்டு விட்டு அவுஸ்திரேலியா இவர் போக மனம் வந்தது இலங்கையில் உழைக்க வழி இல்லாவிட்டால் எப்படி இவருக்கு இருபதாயிரம் டாலர் கிடைத்தது
இலங்கைக்கு ஆயிரக்கணக்கானோர் ஆயிரம் வருடங்களாக வள்ளங்களில் வந்தார்கள் போனார்கள்
ஆனால் இலங்கையர் இன்னமும் இன்றும் அதிகமான நாட்டுப் பற்றோடு இலங்கையில் வாழ்கிறார்கள்.
மலையகத் தமிழர் எல்லாரும் ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவேர்களே தவிர களவாக வள்ளங்களில் வந்தவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் கள்ளத்தோணிகளும் அல்ல
கடந்த எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக கலிங்க படையெடுப்பில் தொடங்கி இருநூறு வருடங்களுக்கு முன் புகையிலை பயிரிட்டு பஞ்சம் போக்கவென வந்தவர்கள் வரை வடஇலங்கைக்கு களவாக ஆயிரக்கணக்கானோர் வள்ளங்களில் தமிழ்நாட்டில் இருந்து வந்தனர்.
பின்னர் நூறு வருடத்திற்கு முன்னர் இவர்களில் ஒரு பகுதியினர் பர்மா(மியான்மார்) சிங்கப்பூர் மலேசியா என்றெல்லாம் பணம் தேட வள்ளங்களில் போனார்கள்.
அறுபது வருடங்களுக்கு முன் இவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தனர். கடந்த முப்பது வருடங்களாக மத்திய கிழக்கு இங்கிலாந்து அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே சுவிஸ் டென்மார்க் ஒல்லாந்து இந்தியா என்று பல நாடுகளுக்கு பொருள் தேடி குடும்பமாக குடி பெயர்ந்தனர்.
திரை கடல் ஓடிய் திரவியம் தேடுவதில் நாங்கள் வல்லவர்கள். வள்ளமும் தோணியும் எங்கள் வம்சமெல்லாம் இன்று உலகமெலாம் பரவ மிக முக்கியமானவை.
வெளி மாவட்டங்களில் யாழ் அகற்றி சங்கங்கள் அமைத்த
முந்தி வந்த யாழ்ப்பாணி பிந்தி வந்த யாழ்ப்பாணியை யாழ்ப்பாணி என்பது போல முந்தி தோணியில் வந்தவன் பிந்தி தோணியில் வந்தவனை கள்ளத்தோணி என்றது தான் உண்மையான எங்கள் வரலாறு.
இதனால் தான் சொத்து மீதும் பணத்தின் மீது நாம் கொண்ட பற்று சக மனிதர் மீதும் இருக்கும் நாட்டின் மீதும் எமக்கு கிடையாது.
எங்கள் முன்னோர் போலவே நாமும் நாடோடியாக எப்படியாவது திரவியம் தேடுவதில் வல்லவர்கள். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கதான் எமக்கெல்லாம் தெரியாது.