ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் – மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு

Read Time:2 Minute, 2 Second

madonna-21பாப் பாடகி மடோனா தனது வீட்டில், ரிஹர்சல் செய்யும்போது பெரும் சத்தம் எழுவதாகவும், இது தனக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கூறி அவர் மீது அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் மடோனாவின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் கரேன் ஜார்ஜ். மடோனாவின் வீட்டுக்கு நேர் எதிரே உள்ள வீடு இவருடையது. இந்த நிலையில் நியூயார்க் மாநில சுப்ரீம் கோர்ட்டில் ஜார்ஜ் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மடோனா வசித்து வரும் 7ஏ அபார்ட்மென்ட் வீட்டில் அவரும், அவரால் அழைக்கப்படும் விருந்தினர்களும் தொடர்ந்து நடனப் பயிற்சி, பாடல் பயிற்சி என ஈடுபட்டு வருகின்றனர்.  அதிக அளவில் பாடல்களை ஒலிக்க விட்டு டான்ஸ் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இதனால் பெரும் சத்தம் ஏற்படுகிறது. இந்த சத்தத்தால் எனது வீட்டின் சுவர்களில் அதிர்வுகள் காணப்படுகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மடோனாவின் அபார்ட்மென்ட் உள்ள கட்டட நிர்வாகத்திடம் நான் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மடோனா மற்றும் குழுவினரால் ஏற்படுத்தப்படும் இந்த சத்தத்தைத் தாங்க முடியாமல் நான் அந்தக் கட்டடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஜார்ஜ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படகில் வந்த 32 தமிழ் அகதிகளை பிடித்த ஆஸ்திரேலியா
Next post புலிகளின் 144 சிறார் போராளிகள் பள்ளியில் அனுமதி