யாழ். மாநகர துணைமேயர் பதவி 1வருடத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸிற்கு..

Read Time:2 Minute, 47 Second

யாழ்ப்பாண மாநகரசபையின் துணைமேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது தொடர்பாக ஈ.பி.டி.பிக்கும் அகிலஇலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் நேற்று உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது இந்த நடைமுறை ஒருவருடத்தின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது இந்த வருடத்திற்கான துணைமேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ ஈ.பி.டி.பி சிபாரிசு செய்திருந்த இருவரையும் நியமிப்பதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றதால் யாழ்மாநகர சபையின் ஆட்சியினை ஆளும் கூட்டமைப்பு கைப்பற்றியது. பாரம்பரிய முறைக்கு மாற்றாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியை சார்ந்தவர்களை முதல்வராகவும் பிரதி முதல்வராகவும் நியமித்தமை கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாலின் போது யாழ் மாநகர துணைமேயர் பதவி ஒருவருடத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வழங்குவதென்று தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் ஒரு வருடத்தின் பின்னர் அப்பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது என்ற உடன்படிக்கையும் கைச்சாத்திட்டுள்ளது. நேற்றைய உடன்படிக்கையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் காலங்களில் யாழ் பிரதிமேயர் பதவி தமது கட்சிக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடம்பெயர்ந்தோர் தொடர்பில் மஹிந்த சமரசிங்கவுடன்; பான்கீ மூன் பேச்சுவார்த்தை
Next post டெங்குநோய் மீண்டும் தீவிரம் கண்டியில் 30பேர் நாடுமுழுவதும் 245பேர் உயிரிழப்பு