புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த ஏழுபேரை மலேசியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை!

Read Time:1 Minute, 42 Second

புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த ஏழுபேரை மலேசியாவுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்களுக்கான பாஸ்போட்டுகள் மற்றும் விசாக்கள் என்பன இன்றுமுற்பகல் கொழும்பு, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோவிலில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி தகவல் தருகையில், புலிகளின் சிறுவர் படையணியில் இருந்தவர்களை புனருத்தாபனம் செய்து அவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலிகளின் சிறுவர் படையணியில் முன்னர் இருந்த ஏழுபேரை தற்போது மலேசியாவுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இவ்வாறான 147பேருக்கு புனருத்தாபனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் இவ்வாறான வேலைத்திட்டங்களை அமைச்சு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருணாவுக்கு அமைச்சர் பதவி திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனையா?.. ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி!
Next post இடைதங்கல் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகச் சந்தேகித்து வவுனியாவில் அதிகரித்து வரும் சோதனை நடவடிக்கைகள்!