பிலியந்தலையில் வைத்து காணாமற்போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன்

Read Time:1 Minute, 32 Second

பிலியந்தலையில் வைத்து காணாமற்போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சிறுவன் திருட்டுத் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா, வேலையில் அமர்த்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சிறுவனை அழைத்துச் சென்ற சந்தேகநபர் இரத்தினபுரியில் உண்டியல் ஒன்றை உடைப்பதற்கு முயற்சித்தாகவும், மோட்டார் சைக்கிள் ஒன்றை விற்பனை செய்ததாகவும் பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்யுமாறு அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் பிலியந்தலைப் பொலீசார் தெரிவித்துள்ளார். சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெப்டன் அலி (வணங்கா மண்) கொலராடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் நலன்புரி நிலைய மக்களுக்கு கிடைக்குமா என சந்தேகம்?!
Next post மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நா செயலர் பான்கீ மூன் சந்திப்பு!