முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமனம்!

Read Time:1 Minute, 39 Second

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுக்காலை 9.07மணிக்குத் தமது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடனான உறவுகளை மீளப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவர் பதவியை சரத் பொன்சேகாவின் மனைவிக்கு வழங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. அனோமா பொன்சேகாவை இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமிப்பதன்மூலம் சரத் பொன்சேகாவின் நட்பை மீளப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஜனதிபதியின் சகோதரரும், பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியிருக்கின்றார் என்றும் தெரியவருகிறது. இராணுவ அதிகாசபையின் தலைவராகப் பதவியேற்றிருக்கும் அனோமா பொன்சேகா இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியின் மகளிர் பிரிவில் சுமார் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமற் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!
Next post கெப்டன் அலி (வணங்கா மண்) கொலராடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் நலன்புரி நிலைய மக்களுக்கு கிடைக்குமா என சந்தேகம்?!