பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவன் நேற்றிரவு பொலிஸாரால் மீட்பு

Read Time:2 Minute, 12 Second

பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவனைப் பொலிஸார் மீட்டுள்ளனர் ஆட்டோ சாரதி ஒருவர் கொடுத்த தகவலையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். விளையாடுவற்கு பட்டம் ஒன்றை வாங்கித்தருவதாக கூறி ஆசைக்காட்டி மேற்படி சிறுவனை இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர் பிலியந்தலை இலக்கம் 1 சிங்கள கனிஷ்ட பாடசாலையில் கல்விகற்று வரும் பெத்தும் மினிந்த எனும் 9வயதுடைய சிறுவனே நேற்று முன்தினம் பிற்பகல் 1.30மணியளவில் கடத்திச்செல்லப்பட்டிருந்தார் சம்பவ தினத்தன்று பிலியந்தலை கனேவத்தை தேவாலயத்தில் பிற்பகல் வேளையில் தனது நண்பர்களோடு பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது தேவாலயத்தில் கூலி வேலை செய்வதற்காக வந்திருந்த இருவர் பட்டம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை பிலியந்தலை நகருக்க அழைத்துச் சென்றுள்ளனர் விளையாடச் சென்ற சிறுவன் மாலையாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தனர் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சிறுவன் கடத்தப்பட்ட விடயம் வெளியானது. தொலைக்காட்சி செய்தியில் சிறுவனது புகைப்படத்தை பார்த்த ஆட்டோ சாரதி ஒருவர் ஒரு நபருடன் கண்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார் இதனையடுத்து குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரணமான மஸ்கெலியா சிறுமிகள் இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் கைது.. வீட்டு உரிமையாளரின் விளக்கமறியல் காலமும் நீடிப்பு
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..