மதுரங்கேணி விவசாய காணி பிரச்சினை தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வாகரை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதுரங்கேணிக்குள காணிப்பிரச்சினை பல நெடுங்காலமாக இருந்துவந்த ஒன்றே 1986ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் அதேநேரம் அங்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து அம்மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர், அதேபோல் 1986ம் ஆண்டுக்கு முற்பட்ட காலம் முதல் இற்றைவரைக்கும் அப்பரதேசத்தில் தாங்களே பூர்வீக குடிகளாக இருந்து வருவதாகவும் தமிழ் மக்கள் சார்பில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவினை எடுக்க முற்பட்டபோதும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தீர்க்கமான முடிவினை எடுக்கமுடியாமல் போனது. இறுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இது தொடர்பான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையி;ல்15 பேர் கொண்ட விசேட குழு ஒன்றினை நியமித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பித்து அதனூடாக பெறப்படுகின்ற முடிவுகளின் அடிப்படையில் இரு சாராருக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்படும் எனவும், இத்தீர்மானம் எடுக்கும் வரை எவரும் குறித்த காணி தொடர்பான பிரச்சனைகளில் தலையிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இக்கலந்துரையாடலில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் பசீர் சேகுதாவுத், மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம், மாசிலாமணி,சசிதரன்,ஜவாகீர்சாலி,முபீன் வாகரை பிரதேச செயலாளர், வாகரைப்பிரதேச தவிசாளர் கணேசன்(சூட்டி), பிரதி அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன், ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், காணி தொடர்பான அதிகாரிகள், மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள், மற்றும் தமிழ் முஸ்லிம் விவசாயப் பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating